முதற்கட்டமாக இந்தியாவில் வெளியாக இருக்கும் ஐபோன்

முதற்கட்டமாக இந்தியாவில் வெளியாக இருக்கும் ஐபோன்

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் SE இந்தியாவில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்தியாவில் ரூ.39,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் SE விற்பனை மந்தமானதைத் தொடர்ந்து விலை குறைக்கப்பட்டு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து ஆப்பிள் ஐபோன் SE விற்பனை அதிகரிக்க துவங்கியுள்ளது. 
 
இந்தியாவில் ஐபோன் SE அடுத்த ஆண்டு வாக்கில் மேம்படுத்தப்பட்டு புதிய ஐபோன் SE 2 மாடல் மற்ற நாட்டு சந்தைகளை விட இந்தியிவால் முதற்கட்டமாக வெளியிடப்படும் என கூறப்படுகிறது. இந்தியாவில் ஐபோன் SE மாடல்களை தயாரித்து வரும் விஸ்ட்ரன் நிறுவனம் புதிய ஐபோன்களையும் தயாரிக்கும் என்றும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் தன் பங்குகளை இருமடங்கு அதிகரிக்க புதிய ஐபோன் SE வழி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.  
 
ஐபோன் SE தயாரிப்பு பணிகளுக்கென புதிய தயாரிப்பு கூடத்தை விஸ்ட்ரன் ஆலையில் உருவாக்கப்பட்டுள்ளது, மேலும் ஆலையை விரிவுப்படுத்த கூடுதல் நிலத்தை வாங்குவது குறித்து கர்நாடகா அரசாங்கத்திடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 
 
\"\"
 
புதிய ஐபோன் SE ஸ்மார்ட்போனில் 4-4.2 இன்ச் ஸ்கிரீன், ஆப்பிள் A10 பிராசஸர், 1700 எம்ஏஎச் பேட்டரி, 32 / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படும் என கூறப்படுகிறது. பட்ஜெட் விலையில் அனைவருக்கும் ஏற்ற சிறிய ஸ்மார்ட்போனாக ஐபோன் SE இருக்கிறது.  
 
ஆப்பிள் இந்த ஆண்டு வெளியிட இருக்கும் ஐபோன் 8 அதிகம் எதிர்பார்க்கப்படும் நிலையி்ல், ஆப்பிள் நிறுவனம் வழக்கத்தை விட கூடுதலாக இரண்டு ஐபோன்களை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. ஐபோன் 8, ஐபோன் 7 எஸ் மற்றும் ஐபோன் 7எஸ் பிளஸ் உள்ளிட்ட மாடல்களை இந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் வெளியிடும் என கூறப்படுகிறது.
 
இதுவரை வெளியாகியுள்ள தகவல்களில் புதிய ஐபோன் 7எஸ் பிளஸ் மாடலில் கிளாஸ் பேக் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேம்படுபத்தப்பட்ட ஐபோன் 7எஸ் மற்றும் ஐபோன் 7எஸ் பிளஸ் மேம்படுத்தப்பட்ட கேமரா அம்சங்கள் மற்றும் 64 ஜிபி / 256 ஜிபி இன்டெர்னல் மெமரி, A11 பிராசஸர்,  2/3 ஜிபி ரேம் உள்ளிட்டவை வழங்கப்படலாம்.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.