முதல் விற்பனையில் விற்று தீர்ந்த ஒன்பிளஸ் 5

முதல் விற்பனையில் விற்று தீர்ந்த ஒன்பிளஸ் 5

ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் 5 ஃபிளாக்‌ஷிப் கில்லர் ஸ்மார்ட்போன் நேற்று நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுக நிகழ்வைத் தொடர்ந்து அமேசான் தளத்தில் புதிய ஒன்பிளஸ் 5 விற்பனைக்கு அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து விற்பனை துவங்கிய சில நிமிடங்களில் அனைத்து ஸ்மார்ட்போன்களும் விற்று தீர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
முதல் விற்பனையில் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதை தொடர்ந்து ஜூன் 27-ந்தேதி ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் ஓபன் சேல் முறையில் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது விற்பனைக்கு வாடிக்கையாளர்கள் எவ்வித முன்பதிவும் செய்ய வேண்டி அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஸ்லேட் கிரே நிறத்தில் 6 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட ஒன்பிளஸ் 5 விலை ரூ.32,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மிட்நைட் பிளாக் நிறத்தில் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமெரி கொண்ட ஒன்பிளஸ் 5 ரூ.37,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு அமேசான் பே கிரெடிட், கின்டிள் சலுகைகள், கேஷ்பேக், டேட்டா சலுகைகள் வழங்கப்படுகின்றன.
 
\"\"
 
ஒன்பிளஸ் 5 சலுகைகள்:
 
புதிய ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போனினை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா கிரெடிட் அல்லது டெபிட் கார்டு கொண்டு வாங்குவோருக்கு ரூ.1,500 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இந்த சலுகை ஜூன் 27 மற்றும் ஜூன் 28-ந்தேதி மட்டுமே வழங்கப்படும். இத்துடன் அமேசான் பிரைம் வீடியோ ஆப் கொண்டு வாங்குவோருக்கு ரூ.250 கேஷ்பேக் வழங்கப்படுகிறது, இந்த பணம் வாடிக்கையாளரின் அமேசான் பே வேலெட்டில் சேர்க்கப்படும். 
 
ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு 12 மாதங்களுக்கு இன்சூரன்ஸ் வசதி கோடக் 811 சேவிங்ஸ் செயலி மூலம் வழங்கப்படுகிறது. இதை ஆக்டிவேட் செய்ய ரூ.1,000 கட்டணம் செலுத்த வேண்டும். வோடபோன் சிம் கார்டு வைத்துள்ள ஒன்பிளஸ் 5 வாடிக்கையாளர்களுக்கு 1 ஜிபி டேட்டா விலையில் 10 ஜிபி டேட்டா ஒரு மாதத்திற்கு வழங்கப்படுகிறது. இந்த சலுகை முதல் ஐந்து ரீசார்ஜ்களுக்கு வழங்கப்படுகிறது. 
 
ஜூன் 22 முதல் செப்டம்பர் 30-ந்தேதி வரை ஒன்பிளஸ் 5 வாங்குவோருக்கு இந்த சலுகை வழங்கப்படும். இதேபோல் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு 9 ஜிபி அளவு கூடுதல் டேட்டா 1 ஜிபி விலையில் ஐந்து மாதங்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் வோடபோன் ரெட் வாடிக்கையாளர்களில் மைவோடபோன் செயலி மூலம் லாக்-இன் செய்வோருக்கு 10 ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. 
 
ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போனினை ஜூன் 22-ந்தேதி முதல் ஜூலை 31-ந்தேதிக்குள் வாங்குவோருக்கு அமேசான் கின்டிள் ரூ.500 மதிப்புள்ள இ-புக் கிரெடிட் வழங்கப்படும். இந்த சலுகையை ஆக்டிவேட் செய்ய வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போன் செயலியில் லாக்-இன் செய்ய வேண்டும். 
 
 
ஒன்பிளஸ் 5 சிறப்பம்சங்கள்:
 
 
\"\"
 
* 5.5 இன்ச் ஃபுல் எச்டி, AMOLED ஸ்கிரீன்
* குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிபிசெட்
* 6 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
* 8 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
* 20 எம்பி, 16 எம்பி கேமரா மாட்யூல், 2X ஆப்டிக்கல் சூம் வசதி
* 16 எம்பி செல்ஃபி கேமரா
* 3300 எம்ஏஎச் பேட்டரி
* டேஷ் சார்ஜிங் வசதி
* ப்ளூடூத், என்எஃப்சி, வைபை
* எல்டிஇ, வோல்ட்இ
 

 

ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போனின் கைரேகை ஸ்கேனரை அழுத்தி பிடித்தால் பேடிஎம் பக்கம் திறக்கும் வசதி வழங்கப்படுகிறது. அமேசான் இந்தியா மட்டுமின்றி சென்னை, ஹைதராபாத் மற்றும் பெங்களூரு நகரங்களிலும் பிரத்தியேக விழாக்கள் நடத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட்டது.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.