மூன்று நாட்களில் ஐந்தரை லட்சம் பேர் முன்பதிவு செய்த ஸ்மார்ட்போன்

மூன்று நாட்களில் ஐந்தரை லட்சம் பேர் முன்பதிவு செய்த ஸ்மார்ட்போன்

ஒப்போ நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஆர் 11 ஸ்மார்ட்போன் சீன சந்தைகளில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. புதிய ஒப்போ ஸ்மார்ட்போன் சீனாவின் JD.com தளத்தில் முன்பதிவிற்கு பட்டியலிடப்பட்டது. இந்நிலையில் முன்பதிவு துவங்கிய முதல் மூன்று நாட்களில் சுமார் 5,80,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். 
 
ஒப்போ ஆர்11 ஸ்மார்ட்போனில் 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் கொண்டுள்ள ஒப்போ ஆர் 11 ஸ்மார்ட்போனில் டூயல் கேமரா அமைப்பு, எல்இடி பிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. மூன்று நிறங்களில் கிடைக்கும் ஒப்போ ஆர்11 ஸ்மார்ட்போனில் கலர் ஒ.எஸ். சார்ந்த ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட் இயங்குதளம் கொண்டு இங்குகிறது.
 
 
\"\"
 
ஒப்போ R11 சிறப்பம்சங்கள்:
 
 
* 5.5 இன்ச் ஃபுல் எச்டி 1080x1920 பிக்சல் ரெசல்யூஷன் டிஸ்ப்ளே
* ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர்
* 4 ஜிபி ரேம்
* 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
* 20 / 16 எம்பி பிரைமரி கேமரா, டூயல் எல்இடி பிளாஷ்
* 20 எம்பி செல்ஃபி கேமரா
* 2900 எம்ஏஎச் பேட்டரி
 

 

கலர் ஒ.எ.எஸ் சார்ந்த ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட் இயங்குதளம் கொண்டு இயங்கும் ஒப்போ R11 ஸ்மார்ட்போனில் 4ஜி எல்டிஇ, ஜிபிஎஸ், வை-பை மற்றும் ப்ளூடூத் போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளது. சீனாவில் CNY 2,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள ஒப்போ ஆர் 11 ஸ்மார்ட்போனின் அடுத்த பிளாஷ் விற்பனை நாளை (ஜூன் 16-ந்தேதி) காலை 10.00 மணிக்கு நடைபெறுகிறது.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.