மூன்று புதிய நிறங்களில் அசத்தும் யமஹா YZF R15 V3.0

மூன்று புதிய நிறங்களில் அசத்தும் யமஹா YZF R15 V3.0

யமஹா நிறுவனத்தின் புதிய YZF-R15 V3.0 இந்தியாவில் சமீபத்தில் நடைபெற்ற 2018 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டது. நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட மோட்டார்சைக்கிள் தற்சமயம் மூன்று புதிய நிறங்களில் அறிமுகமாகியுள்ளது.
 
யமஹா R15 V3.0 இந்தோனேஷியா சந்தையில் மூன்று புதிய நிறங்களில் வெளியிடப்பட்டுள்ளது. ரேசிங் புளு, ரேசிங் எல்லோ மற்றும் ரேசிங் பிளாக் என மூன்று புதிய நிறங்களிலும் புதிய கிராஃபிக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. புதிய கிராஃபிக்ஸ் மோட்டார்சைக்கிள் தோற்றத்தை மேலும் மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
 
இத்துடன் மோட்டார்சைக்கிளின் முன்பக்க ஃபோர்க் தங்க நிறத்தில் பெயின்ட் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் யமஹா R15 V3.0 ரேசிங் புளு மற்றும் தன்டர் கிரே என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் பிரீமியம் பாகங்களான அப்சைடு டவுன் ஃபோர்க், அலுமினியம் ஃபூட்பெக் அசெம்ப்ளி மற்றும் மெட்ஸ்லெர் டையர்கள் இந்திய மாடலில் வழங்கப்படவில்லை.
 
 
யமஹா YZF-R15 V3.0 மாடலில் 155சிசி சிங்கிள் சிலிண்டர், லிக்விட் கூல்டு, ஃபியூயல் இன்ஜெக்டெட் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 19.03 பி.ஹெச்.பி. பவர், 15 என்.எம். டார்கியூ, 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டுள்ளது. ஸ்லிப்பர் கிளட்ச் இடம்பெற்றிருப்பதால் கியர் டவுன்ஷிஃப்ட் செய்யும் போது மென்மையாக இருக்கும். 
 
இத்துடன் செயல்திறனை மேம்படுத்தும் VVA சிஸ்டம் எனும் அம்சத்தை யமஹா அறிமுகம் செய்திருக்கிறது. புதிய யமஹா YZF-R15 V3.0 வடிவமைப்பு அதன் முந்தைய YZF-R1  மற்றும் YZF-R6 மாடல்களை தழுவி வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
 
இதன் டெயில் பகுதியில் புதிய வடிவமைப்புடன் கூடிய டெயில் லைட் மற்றும் டையர் ஹக்கர் வழங்கப்பட்டிருக்கிறது. புதிய யமஹா YZF-R15 V3.0 மாடலில் முற்றிலும் புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், கியர் பொசிஷன் இன்டிகேட்டர், 18 பாராமீட்டர் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.