மூலநோய்க்கு காரணமும் - சிகிச்சையும்

மூலநோய்க்கு காரணமும் - சிகிச்சையும்

ஒழுங்கான இடைவேளைகளில் உணவு உட்கொள்ளமை, வறண்ட தன்மையுடைய, கெட்டியான உணவுகள், காரமிக்க உணவுகள், அடிக்கடி மிகுந்த தூரம் பயணம் செய்வது ஆகியன மூலநோய்க்கு காரணம்.

ஆசனவாய் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் நரம்புகள் வீங்குவதே இதற்கு காரணம். பிறப்பிலே அமைந்தது, பிறந்த பின் வந்தது என இரண்டு வகைகள் இருக்கின்றன. இவற்றில் ரத்தக் கசிவுடன் கூடியதாகவும், வறண்டதாகவும் இருவகைகள் உள்ளன.

ஆயுர்வேதம் இவ்வியாதியை 6 வகைகளாக பிரிக்கிறது.

வாதம் காரணமாக வரும் மூல வியாதியில் தொடைப்பகுதி, வயிறு, முதுகு, சிறுநீர்ப்பை ஆகிய இடங்களில் வலி, ஜலதோ‌ஷம், இருமல், தும்மல் ஆகிய பிரச்சினைகள் இருக்கும்.

பித்தத்தினால் வரும் மூலவியாதியில் வலி, எரிச்சல், அரிப்பு, இரத்தம், சீழ் வடிதல், வயிற்றுப்போக்கு, காய்ச்சல், மூச்சுவிட சிரமம், பசியின்மை ஆகிய அறிகுறிகள் இருக்கும்.

கபத்தினால் வரும் மூலவியாதியில் ஜவ்வு போன்ற கசிவும், இரத்தக்கசிவும் இருக்கும். ஜலதோ‌ஷம், இருமல், அதிக உமிழ்நீர் சுரத்தல், வாயில் இனிப்பு சுவை, மலத்துடனும், சிறுநீருடனும் ஜவ்வு படலம் வெளியேறுதலும் இருக்கும்.

ரத்த கசிவுடன் கூடிய மூல வியாதியில், அதிகப்படியான உதிரபோக்கு இருக்கும்; ஆடாதோடா இலை, ஆமணக்கு இலை ஆகியவற்றில் இருந்து எடுத்த கஷாயத்தை ஒத்தடம் கொடுக்கலாம்; வாதத்தைக்குறைத்து, மலச்சிக்கலை நீக்கி, செரிமானத்தை அதிகரிக்கும் மருந்துகளை கொடுக்கலாம்.

சிகிச்சை, உணவு

மோர் மிகச்சிறந்த மருந்து; தயிர் ஆகாது.

துத்தி மிகவும் பயன்தரும்; துத்தி இலையை கழுவி, வாயிலிட்டு மென்று விழுங்க வேண்டும்.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் எண்ணெய் தடவிய இலையை சூடுபடுத்தி, மூலத்தின் மீது வைக்கலாம்.

எள்ளை அரைத்து வெண்ணெயுடன் சேர்த்து மூலத்தின் மீது போட்டால் இரத்தக் கசிவு நின்று விடும்.

2 தேக்கரண்டி எள், ஒரு கைப்பிடி சாம்பார் வெங்காயம் இரண்டையும் கலந்து, நெய்யில் வதக்கி சாப்பிட்டால் மூலவியாதி காரணமாக கட்டி வந்து அவதிப்படுவர்களுக்கும், ரத்தம் மலத்துடன் போதல், மலம் கழிக்கும் போது எரிச்சல் ஆகியவற்றுக்கு நல்ல மருந்து.பொன்னாங்கன்னிக்கீரை, பாசிப்பருப்பு, சிறிய சாம்பார் வெங்காயம் சேர்த்த கூட்டு 30 நாட்களுக்கு உண்ணவும். இந்த 30 நாட்களுக்கு தண்ணீர் குடிக்காமல் மோர் மட்டும் சேர்த்துக்கொள்ள வேண்டும.

வலி, எரிச்சல் காரணமாக உட்கார முடியாமல் அவதிப்படுவோர் சின்ன வெங்காயம் உரித்த சருகு எடுத்து சிறிய தலையணை செய்து உட்கார உபயோக படுத்த வேண்டும். வலி, எரிச்சல் குறையும்.

வயிறு தொடர்பான பிரச்சினைகளுக்கான உணவு பொருட்கள் (டிப்ஸ்)

சிலருக்கு நோய்வாய் பட்டிருக்கும் போது சரியாக பசிக்காது. உணவும் செரிக்காது. செரிமானம் நன்கு நடக்கவும், பசியை தூண்டவும் ஒருசூப்.

2 முருங்கை காய்களை சாம்பாருக்கு நறுக்குவது போல நறுக்கி வேக விடவும்.

சதை பற்றான பகுதி குழைந்துவிடாமல் பார்த்து கொள்ளவும்.

இரண்டு டம்ளர் மோரில், வேக வைத்த முருங்கை காய்களை போட்டு, அத்துடன், கால் தேக் கரண்டி மஞ்சள்தூள், வாயுவிடங்கப் பொடி அரை தேக்கரண்டி, திப்பிலி வேர்ப்பொடி அரை தேக்கரண்டி ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும்; தேவையான உப்பு சேர்க்கவும்.

இதனை மிதமான சூட்டில் கொதிக்க விடவும்

கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி பருகவும்.

நோயின் பிடியில் இருந்து மீள்வதற்கு மருந்தோடு சேர்த்து சத்தான உணவைத் தருவதுதான் சரியான சிகிச்சை முறை. இப்படிச்சத்தான உணவைத் தருவதற்கு முன் உடலைச்சுத்தம் செய்ய வேண்டும் என்கிறது ஆயுர்வேதம். வயிறும், மனதும் சுத்தமாக இருந்தால் தான் உடலுக்குச்சத்து தர முடியும். உடலைச்சுத்தம் செய்வதற்கெனச் சில தனிப்பட்ட மருந்துகள் உள்ளன.

ஆனால் இவற்றைச்சாப்பிடக்கூட உடலில் ஓரளவாவது சக்தி வேண்டும். ஆகவே தேவையான அளவு உடலைத்தயார் செய்து விட்டு சுத்தம் செய்யும் மருந்துகளைக் கொடுப்பர். (பேதி மருந்து போன்றவை) சுத்தம் செய்து விட்டு, சத்துணவை தரும்போது முழுச்சத்தும் உடலால் உறிஞ்சப்பட்டு உடலின் எல்லாத் திசுக்களுக்கும் போய்ச் சேருகிறது. இதனால் நோய்கிருமிகளை எதிர்த்துப்போரிட முடிகிறது.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.