மேம்படுத்தப்பட்ட புதிய அவுட்லேண்டர் எஸ்.யு.வி.: இணையம் மூலம் உறுதி செய்த மிட்சுபிஷி

மேம்படுத்தப்பட்ட புதிய அவுட்லேண்டர் எஸ்.யு.வி.: இணையம் மூலம் உறுதி செய்த மிட்சுபிஷி

மிட்சுபிஷி இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புதிய அவுட்லேண்டர் மாடல் கார் விரைவில் வெளியிடப்படும் என்ற தலைப்பில் பதிவிடப்பட்டுள்ளது. இந்தியாவில் வெளியிடப்படுவதை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் புதிய அவுட்லேண்டர் மிட்சுபிஷி மான்டெரோ மற்றும் பஜேரோ ஸ்போர்ட மாடல்களுடன் இணந்து கொள்ளும். 
 
தற்சமயம் வெளியாக இருக்கும் அவுட்லேண்டர் மூன்றாவது தலைமுறை மாடல் ஆகும். அதிகப்படியான மாற்றங்கள் செய்யப்பட்ட 2015-ம் ஆண்டு அப்டேட் செய்யப்பட்ட அவுட்லேண்டர் நியூ யார்க் நகரில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோ விழாவில் அனைவரையும் கவர்ந்தது. 2016-இல் வெளியிடப்பட்ட அவுட்லேண்டர் புத்தம் புதிய டைனமிக் ஷீல்டு கொண்டிருந்தது. 
 
முந்தைய மாடல்களை விட அதிக கூர்மையான வடிவமைப்பு கொண்டிருந்த ஆஃப்-ரோடு காரில் மேம்படுத்தப்பட்ட எல்இடி DRL மற்றும் ஃபுல் எல்இடி ஹெட்லேம்ப்களை தேர்வு செய்யும் வசதியும் வழங்கப்பட்டது. இதேபோல் இன்டீரியர் அம்சங்களிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்படடன. அதன்படி புதிய லெதர் இருக்கைகள், டூயல் சோன் கிளைமேட் கண்ட்ரோல், 710 வாட் ராக்ஃபோர்டு ஃபோஸ்கேட் பிரீமியம் சவுண்டு சிஸ்டம், புஷ் பட்டன் ஸ்டார்ட், மழையை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் வைப்பர் மற்றும் மின்னணு சன்-ரூஃப் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.       
 
\"\"
 
இந்த எஸ்.யு.வி. ஏழு ஏர்பேக் மற்றும் ஆட்டோ ஹெட்லேம்ப் மற்றும் ஸ்டான்டர்டு ஃபிட்மென்ட் உள்ளிட்டவற்றை கொண்டிருந்தது. புதிய அவுடன்லேண்டர் MIVEC கேசோலைன் இன்ஜின் மூலம் இயங்குகிறது. இது 2.0 அல்லது 2.4 லிட்டர் நான்கு சிலிண்டர் மோட்டாராக இருக்கும் என்றும் அதிகபட்சம் 140-170 bhp செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு CVT டிரான்ஸமிஷன், 4WD சிஸ்டம், ஸ்டான்டர்டு மற்றும் ECO மோட்களை கொண்டிருக்கும். 
 
இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டால் புதிய அவுட்லேண்டர் ஹோன்டா நிறுவனத்தின் CR-V, ஹூன்டாய் டக்சன், ஜீப் காம்பஸ் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமையும். இந்தியாவில் மேம்படுத்தபட்ட பதிய அவுட்லேண்டர் விலை ரூ.18-23 லட்சத்தில் நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.