மைக்ரோமேக்ஸ் செல்ஃபி 2 இந்தியாவில் வெளியானது

மைக்ரோமேக்ஸ் செல்ஃபி 2 இந்தியாவில் வெளியானது

மைக்ரோமேக்ஸ் நிறுவன இணையதளத்தில் சில தினங்களுக்கு முன் பட்டியலிடப்பட்ட செல்ஃபி 2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. செல்ஃபி ஸ்பெஷல் ஸ்மார்ட்போனாக உருவாக்கப்பட்டுள்ள புதிய ஸ்மார்ட்போன் 5.5 இன்ச் எச்டி 2.5டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, குவாட்கோர் மீடியாடெக் MT6737 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. 
 
ஆண்ட்ராய்டு நௌக்கட் இயங்குதளம் கொண்டு இயங்கும் செல்ஃபி 2 ஸ்மார்ட்போனில் 13 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமரா வழ்கப்பட்டுள்ளது. மெட்டல் வடிவமைப்பு, கைரேகை ஸ்கேனர் வசதி வழங்கப்பட்டுள்ள செல்ஃபி 2 ஸ்மார்ட்போனின் முழு சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம். 
 
 
\"\"
 
மைக்ரோமேக்ஸ் செல்ஃபி 2 சிறப்பம்சங்கள்:
 
 
* 5.5 இன்ச் 1280x720 பிக்சல் IPS 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே 
* 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் MT6737 பிராசஸர்
* 3 ஜிபி DDR3 ரேம்
* 32 ஜிபி இன்டெர்னல் மெமரி 
* மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
* ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் 
* டூயல் சிம் ஸ்லாட்
* 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
* சோனி IMX135 சென்சார், f/2.0 அப்ரேச்சர்
* 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், 
* OV8856 சென்சார், f/2.0 அப்ரேச்சர் 
* 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
* கைரேகை ஸ்கேனர்
* 4ஜி வோல்ட்இ, வைபை 802.11 b/g/n, 
* ப்ளூடூத் 4.0, ஜிபிஎஸ்
* 3000 எம்ஏஎச் பேட்டரி
 

 

இந்தியாவில் மைக்ரோமேக்ஸ் செல்ஃபி 2 ஸ்மார்ட்போன் பிளாக் நிறத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை இந்தியாவில் ரூ.9,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இன்று (ஆகஸ்டு 1-ம் தேதி) முதல் மைக்ரோமேக்ஸ் செல்ஃபி 2 விற்பனை துவங்குகிறது.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.