மைக்ரோ விலை... மேக்ரோ பேட்டரி... இந்த மொபைல்களை கவனத்தில் கொள்க!

மைக்ரோ விலை... மேக்ரோ பேட்டரி... இந்த மொபைல்களை கவனத்தில் கொள்க!

புதிதாக மொபைல் போன் வாங்கும்போது கவனிக்க வேண்டிய பட்டியலில், பேட்டரித்திறனும் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. தேவைகள் தொடர்ந்து அதிகரித்துவருவதால், \'போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து\' என்பது டிஜிட்டல் உலகத்துக்குப் பொருந்தாது. வீட்டில் இருக்கும்போது சார்ஜரிலும், அலுவலகத்தில் இருக்கும்போது டேட்டா கேபிளிலும் எந்நேரமும் மொபைல் போனை இணைத்திருந்த காலம் மலையேறிக்கொண்டிருக்கிறது. பேட்டரி சார்ஜ் எளிதில் தீர்ந்துவிடக்கூடாது என்பதற்காக, அதிக பேட்டரித்திறன் கொண்ட ஸ்மார்ட்போன்கள் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில், லேட்டஸ்ட் ட்ரெண்ட்டான 5000 mAh பேட்டரித்திறன் கொண்ட ஸ்மார்ட்போன்கள் இவைதாம்.

மோட்டோ E4 ப்ளஸ் (Moto E4 Plus):

\"Moto

பேட்டரித்திறன்தான் மோட்டோ E4 ப்ளஸ் மொபைலின் முக்கிய அம்சமாகும். 5000 mAh திறன் உள்ள நான் ரிமூவல் பேட்டரி கொண்ட இந்த மொபைல் போன், 5.5 இன்ச் HD டிஸ்ப்ளே கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 3 GB RAM மற்றும் 32 GB இன்டர்னல் மெமரி கொண்ட இந்த மாடலின் ஒரு வெர்ஷன் மட்டுமே லெனோவா நிறுவனத்தால் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 13 மெகா பிக்ஸல் பின்பக்க கேமராவும், 5 மெகா பிக்ஸல் முன்பக்க கேமராவும் இதில் உள்ளன. செல்பி பிரியர்களுக்காக இரண்டு கேமராக்களிலும் LED ஃபிளாஷ் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஆண்ட்ராய்டின் லேட்டஸ்ட் வெர்ஷனான நெளகட், 4G VoLTE, டூயல் சிம், ஃபிங்கர் பிரின்ட் சென்சார், மீடியாடெக் 1.3Ghz பிராஸசர் போன்ற கவர்ச்சிகரமான விஷயங்கள் இதில் இருக்கின்றன.

விலை : ரூ. 9,999/-

 

இன்போகஸ் டர்போ 5 (Infocus Turbo 5) :

\"Infocus

5000 mAh பேட்டரித்திறன் கொண்ட இந்த மொபைல் போன் கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மொபைல் போனின் இரண்டு சிம்களிலும் 4G வசதியைப் பயன்படுத்த முடியும். இதிலும், 13 மெகா பிக்ஸல் மெயின் கேமராவும், 5 மெகா பிக்ஸல் பின்பக்க கேமராவும் உள்ளன. 2 GB RAM / 16 GB இன்டர்னல் மெமரி மற்றும் 3 GB RAM / 32 GB இன்டர்னல் மெமரி என இரண்டு வெர்ஷன்கள் இந்த மாடலில் கிடைக்கின்றன. ஆண்ட்ராய்டு நெளகட் வெர்ஷன், 5.2 இன்ச் டிஸ்ப்ளே, டூயல் சிம் போன்றவை இருந்தாலும், 32 GB வரை மட்டுமே இதன் மெமரியை நீட்டிக்க முடியும் என்பது இதன் மிகப்பெரிய குறை.
 

விலை :

2 GB RAM / 16 GB இன்டர்னல் மெமரி - Rs. 6,999/-
3 GB RAM / 32 GB இன்டர்னல் மெமரி - Rs. 7,999/-

அசூஸ் ஜென்ஃபோன் மேக்ஸ் (Asus Zenfone Max) :

\"Asus

மீடியம் பட்ஜெட் மொபைல் போன்களில் ஹிட் அடித்த அசூஸ் நிறுவனத்தின், ஜென்ஃபோன் மேக்ஸ் மாடல் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. 5,000 mAh பேட்டரிதான் இந்த போனின் பெரிய ப்ளஸ். மேலும், ரிவர்ஸ் சார்ஜிங் முறையில் இந்த மொபைல் போனிலிருந்து மற்றொரு டிவைஸ்க்கு சார்ஜ் ஏற்றிக்கொள்ளும் வசதியும் இதில் இருக்கிறது. 5.5 இன்ச் டிஸ்ப்ளே, 1.5 GHz ஆக்டாகோர் பிராஸசர், 13 மெகா பிக்ஸல் மெயின் கேமரா மற்றும் 5 மெகா பிக்ஸல் முன்பக்க கேமரா போன்ற கவர்ச்சிகரமான அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இருக்கின்றன. ஆனால், ஃபிங்கர் பிரின்ட் சென்சார் இல்லாததும், எடை கொஞ்சம் அதிகமாக இருப்பதும் இதன் மைனஸ்களாகக் கருதப்படுகின்றன. ரேம் மற்றும் இன்டர்னல் மெமரி போன்றவற்றின் அடிப்படையில், மூன்று வெர்ஷன்களாக இந்த மாடல் கிடைக்கிறது.
 

விலை :

2 ஜி.பி ரேம்/ 16 ஜி.பி மெமரி மாடல்:  Rs. 8,800 முதல்
2 ஜி.பி ரேம்/ 32 ஜி.பி மெமரி மாடல்:  Rs. 9,499 முதல்
3 ஜி.பி ரேம்/ 32 ஜி.பி மெமரி மாடல்:   Rs. 10,990 முதல்

 

லெனோவா P2 (Lenovo P2) :

\"5100

மூன்று நாள்களுக்கு ஒருமுறை சார்ஜ் செய்தால் போதும் என்ற விளம்பரத்தோடு விற்பனைக்கு வந்திருக்கிறது லெனோவா P2 மொபைல் போன். ரேபிட் சார்ஜிங் முறையில் சார்ஜ் ஏறுவதால், மற்ற மொபைல் போன்களைவிட விரைவாக சார்ஜ் ஏறக்கூடியது. 5100 mAh பேட்டரித்திறன், 5.5 இன்ச் AMOLED ஹெச்.டி டிஸ்ப்ளே, Qualcomm® Snapdragon™ 625 பிராஸசர் போன்ற அம்சங்கள் இந்த மொபைல் போனில் ஈர்க்கின்றன. ஃபுல் மெட்டல் பாடியில் ஸ்லிம்மாக இருக்கும் இந்த மொபைலில், ஃபிங்கர் பிரின்ட் ஸ்கேன்னர் முன்பக்கம் இருக்கிறது. இதில் இருக்கும் 13 மெகா பிக்ஸல் பின்பக்க கேமரா மற்றும் 5 மெகா பிக்ஸல் முன்பக்க கேமரா இரண்டிலும் குறைந்த ஒளியிலும் தரமான புகைப்படங்கள் எடுக்க முடிகிறது. 32 GB இன்டர்னல் மெமரி கொண்ட இந்த மாடல், 3 GB மற்றும் 4 GB RAM என இரண்டு வெர்ஷன்களில் கிடைக்கிறது. டூயல் சிம் பயன்படுத்த ஹைப்ரிட் ஸ்லாட் இருந்தாலும், மெமரி கார்டு பயன்படுத்த விரும்பினால் ஒரு சிம்மை மட்டுமே பயன்படுத்த முடியும்.

விலை :

3 GB RAM - Rs.13,499/-
4 GB RAM - Rs.15,499/-

 

ZTE பிளேடு A2 ப்ளஸ் (ZTE Blade A2 Plus) :

\"ZTE

ZTE பிளேடு A2 ப்ளஸ் மொபைல் போனில் 5000 mAh பேட்டரியைத் தாண்டியும் சில அம்சங்கள் ஈர்க்கின்றன. இதில் உள்ள ஃபிங்கர் பிரின்ட் சென்சார், வெறுமனே மொபைல் போனை அன்லாக் மட்டும் செய்வதில்லை. புகைப்படம் எடுக்கவும், மொபைலுக்கு வரும் அழைப்புகளை சிங்கிள் கிளிக்கில் ஏற்கவும்கூட ஃபிங்கர் பிரின்ட் சென்சாரைப் பயன்படுத்தலாம். செல்பி எடுக்கும்போது டிஸ்ப்ளேவை ஃப்ளாஷ்க்காகவும் பயன்படுத்திக்கொள்ள முடியும். 5.5 இன்ச் டிஸ்ப்ளே, 4 GB RAM, 32 GB இன்டர்னல் மெமரி, 13 மெகா பிக்ஸல் பின்பக்க கேமரா, 8 மெகா பிக்ஸல் முன்பக்க கேமரா, 4G VOLTE, டூயல் சிம் போன்ற அம்சங்களுடன் மீடியம் பட்ஜெட்டில் இந்த மாடல் கிடைக்கிறது.
 

விலை : Rs.11,999/-

 

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.