மொபைல் பேட்டரி லைஃப் நல்லா இருக்கனும்னா இதைக் கவனிங்க ப்ளீஸ்!

மொபைல் பேட்டரி லைஃப் நல்லா இருக்கனும்னா இதைக் கவனிங்க ப்ளீஸ்!

லகம் நாளைக்கே அழியப்போகுதுன்னு சொன்னாலும், அதுவரைக்கும் மொபைல் பேட்டரி ஃபுல் சார்ஜ் இருக்குமான்னு கவலைப்பட்றவங்க தான் ஸ்மார்ட்போன் யூசர்ஸ். \'வெளியே கிளம்புவதற்கு பேட்டரி ஃபுல் என்பதைவிட வேறென்ன நல்ல சகுணம் இருந்துவிடப் போகிறது!\' என்பது பிரபலமான ட்விட்டர் மொழி. மொபைல் பேட்டரி நீடித்து உழைக்க கடைப்பிடிக்க வேண்டிய சில வழிகள்.

\"மொபைல்

பேட்டரி பாவம் :

\'மொபைல் தானாக ஆஃப் ஆகும்வரை பயன்படுத்திவிட்டு, அதன்பின் ஃபுல் சார்ஜ் போடுங்க. அப்பதான் பேட்டரி லைஃப் நல்லாருக்கும்\' எனப் புதிதாக மொபைல் வாங்கியதும் அனைவரும் இலவசமாக அறிவுரை தருவார்கள். இது சரியான முறை தானா எனக் கேட்டால், பேட்டரி முழுதாகத் தீரும்வரைப் பயன்படுத்துவது சரியல்ல என்கிறார்கள் வல்லுநர்கள். இப்படிச் செய்வது மொபைல் பேட்டரியின் வாழ்க்கையைக் குறைக்கும். மேலும் சார்ஜ் குறைவாக இருக்கும்பொழுது மொபைலைப் பயன்படுத்தினால், மொபைல் வெளிப்படுத்தும் கதிர்வீச்சின் அளவு அதிகமாக இருப்பதோடு, விரைவில் சூடாகிவிடும். எனவே பேட்டரி சார்ஜ் குறையும்போது உடனடியாக சார்ஜ் செய்துகொள்வது நல்லது.

 

இரவு நேரம் சார்ஜ் போடும்போது கவனம்  :

மொபைலை இடைவிடாது பயன்படுத்திவிட்டு இரவு முழுவதும் சார்ஜ் போடுவதை சிலர் வழக்கமாக வைத்திருப்பார்கள். முழுவதுமாக சார்ஜ் ஏறியதும், அதற்குமேல் சார்ஜ் ஏறாதவாறு மொபைல் தானாகவே நிறுத்திக்கொள்ளும். ஆனாலும் இரவில் மின் அழுத்தம் அதிகமாக இருக்கும் என்பதால், இரவு நேரம் சார்ஜ் போடுவதைத் தவிர்ப்பது நல்லது.


தரம் குறைந்த சார்ஜருக்கு \'நோ\' சொல்லுங்கள் :

\"மொபைல்

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் அனைத்துக்கும் USB டைப் சார்ஜர் தான் பயன்படுத்தப்படுகின்றன. எனவே சிலர் USB டைப் சார்ஜர் எது கிடைத்தாலும் மாற்றி மாற்றிப் பயன்படுத்துவர். \'எல்லாமே ஒன்னுதான பாஸ்\' எனத் தோன்றினாலும், ஒவ்வொரு மொபைலுக்கும் சர்க்யூட் வேறு என்பதால் தங்கள் மொபைலுக்கென பிரத்யேகமாக வழங்கப்பட்ட சார்ஜர்களைப் பயன்படுத்துவது பேட்டரியை நீட்டிக்க வழிசெய்யும். அதுமட்டுமின்றி, விலை குறைவான தரம் குறைந்த சார்ஜர்களைப் பயன்படுத்தும்போது சார்ஜ் ஏறுவது தாமதமாவதோடு, பேட்டரியைப் பதம் பார்க்கவும் வாய்ப்பிருக்கிறது.


ரீபூட் அவசியம் :

சிம், மெமரி கார்ட் போன்றவற்றை மாற்றும்பொழுதோ அல்லது மொபைல் ஸ்ட்ரக் ஆனபோது மட்டும்தான் நம்மில் பலரும் மொபைலை ஆஃப் செய்திருப்போம். 24 மணிநேரமும் இடைவிடாது மொபைலைப் பயன்படுத்தியே பழக்கப்பட்டுவிட்டோம். ஆனால் தினமும் ஒரு முறையாவது மொபைலை ரீபூட் செய்வது அவசியம் என்கிறார்கள் வல்லுநர்கள். குறைந்தபட்சம் வாரம் ஒரு முறையாவது மொபைலை ரீபூட் செய்வது பேட்டரியின் லைஃப்பை அதிகரிப்பதோடு, மொபைலின் செயல்திறன் அதிகரிக்கவும் உதவும். 

லொக்கேசன் சர்வீசஸ ஆஃப் பண்ண மறக்காதீங்க :

கால் டாக்ஸி புக் செய்வதில் தொடங்கி, மேப்பில் ஓர் இடத்தைத் தேடுவது வரை ஜி.பி.எஸ் சேவை பலவிதமாகப் பயன்படுகிறது. ஆனால் லொக்கேசன் சர்வீஸை ஒருமுறைப் பயன்படுத்திவிட்டு அதை ஆஃப் செய்ய மறந்துவிடுவோம். இது பேட்டரியை அளவுக்கதிகமாகத் தின்று தீர்த்துவிடும். லொக்கேசன் சர்வீஸைப் பயன்படுத்தியவுடன் உடனடியாக அதை அணைக்க மறக்காதீர்கள்.

குறுஞ்செய்தி, அழைப்புகள், அறிவிப்புகள் என அனைத்துக்கும் வைப்ரேட் ஆப்ஷனை தேர்வு செய்யாதீர்கள். இது ஒலியை விடவும் அதிக சக்தியை இழுக்கும். தவிர்க்க முடியாத சூழல்களைத் தவிர்த்து, மற்ற நேரங்களில் வைப்ரேஷன் ஆப்ஷனை எடுத்துவிடுங்கள்.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.