மோட்டோ ஜி5எஸ் மற்றும் ஜி5எஸ் பிளஸ் ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்பட்டது

மோட்டோ ஜி5எஸ் மற்றும் ஜி5எஸ் பிளஸ் ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்பட்டது

மோட்டோரோலாவின் மோட்டோ ஜி5எஸ் மற்றும் மோட்டோ ஜி5எஸ் பிளஸ் ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட்டுள்ள \'எஸ்\' ஸ்பெஷல் எடிஷனை குறிக்கிறது. பெயருக்கு ஏற்றார்போல் புதிய ஸ்மார்ட்போனில் முந்தைய மோட்டோ ஜி5 சீரிஸ் மாடல்களை விட அதிகப்படியான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 
 
புதிய மோட்டோ ஜி5எஸ் மற்றும் ஜி5எஸ் பிளஸ் விலை முறையே EUR 249 அதாவது இந்திய மதிப்பில் ரூ.18,900 மற்றும் EUR 299 அதாவது இந்திய மதிப்பில் ரூ.22,700 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளில் இவை விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது.
 
\"\"
 
மோட்டோ ஜி5எஸ் சிறப்பம்சங்கள்:
 
* 5.2 இன்ச் 1080x1920 பிக்சல் டிஸ்ப்ளே
* 1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430
* 3 ஜிபி ரேம்
* 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
* மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
* ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட்
* 16 எம்பி பிரைமரி கேமரா, ஆட்டோஃபோகஸ்  
* 5 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி பிளாஷ் 
* 4ஜி எல்டிஇ, ப்ளூடூத்
* ஜிபிஎஸ், வைபை
* 3.5 எம்எம் ஆடியோஜாக்
* 3000 எம்ஏஎச் பேட்டரி
* டர்போ பவர் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
 
மோட்டோ ஜி5எஸ் ஸ்மார்ட்போனின் ஹோம் பட்டனில் கைரேகை ஸ்கேனர் பொருத்தப்பட்டுள்ளது. இத்துடன் பிராக்சிமிட்டி சென்சார், ஆக்செல்லோமீட்டர், கைரோஸ்கோப். ஆம்பியன்ட் லைட் சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. புதிய மோட்டோ ஜி5எஸ் லூனார் கிரே மற்றும் ஃபைன் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. 
 
\"\"
 
மோட்டோ ஜி5எஸ் பிளஸ் சிறப்பம்சங்கள்:
 
* 5.5 இன்ச் 1080x1920 பிக்சல் டிஸ்ப்ளே
* 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 625
* 3 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
* 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
* மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
* ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட்
* 13 + 13 எம்பி டூயல் பிரைமரி கேமரா  
* 8 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி பிளாஷ் 
* 4ஜி எல்டிஇ, ப்ளூடூத்
* ஜிபிஎஸ், வைபை
* 3.5 எம்எம் ஆடியோஜாக்
* 3000 எம்ஏஎச் பேட்டரி
* டர்போ பவர் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
 
மோட்டோ ஜி5எஸ் பிளஸ் ஸ்மார்ட்போனிலும் ஹோம் பட்டனில் கைரேகை ஸ்கேனர் பொருத்தப்பட்டுள்ளது. மோட்டோ ஜி5எஸ் பிளஸ் ஸ்மார்ட்போன் லூனார் கிரே மற்றும் பிளஷ் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. மேலும் இதில் வழங்கப்பட்டுள்ள டர்போ பவர் சார்ஜிங் வசதியை கொண்டு ஸ்மார்ட்போனினை 15 நிமிடங்களுக்கு சார்ஜ் செய்து 6 மணி நேரம் பயன்படுத்த முடியும்.
 

 

தேர்வு செய்யப்பட்ட சந்தைகளில் மோட்டோ ஜி5எஸ் ஸ்மார்ட்போனில் டூயல் சிம் ஸ்லாட் மற்றும் மோட்டோ ஜி5எஸ் பிளஸ் ஸ்மார்ட்போனில் ஒற்றை சிம் ஸ்லாட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போனில் மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.