மோட்டோ ஜி5 பிளஸ் விற்பனை: நிமிடத்திற்கு 50 செட் விற்று சாதனை

மோட்டோ ஜி5 பிளஸ் விற்பனை: நிமிடத்திற்கு 50 செட் விற்று சாதனை

மோட்டோரோலா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மோட்டோ ஜி5 பிளஸ் சில தினங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது. மார்ச் 15-இல் பிளிப்க்ராட் தளத்தில் விற்பனைக்கு வந்த மோட்டோ ஜி5 பிளஸ் 3 ஜிபி / 16 ஜிபி மாடல் நிமிடத்திற்கு 50 செட் என்ற கணக்கில் விற்பனையானதால் சில நிமிடங்களிலேயே முழுவதும் விற்றுத் தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
\'பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக நடைபெற்ற மோட்டோ ஜி5 பிளஸ் விற்பனை அமோக வரவேற்பை பெற்றுள்ளது, மக்கள் எளிய விலையில் கிடைக்கும் புதிய தொழில்நுட்பங்களை ஏற்று கொள்வதை வெளிப்படுத்துகிறது\', என பிளிப்கார்ட் தளத்தின் மொபைல் பிரிவு தலைவர் ஐயப்பன் தெரிவித்துள்ளார். 
 
\"\"
 
சிறப்பம்சங்களை பொருத்த வரை மோட்டோ ஜி5 பிளஸ் ஸ்மார்ட்போனில் 5.2 இன்ச் 1080x1920 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் கேபாசிட்டிவ் டச் ஸ்கிரீன் மற்றும் கைரேகை ஸ்கேனர் வசதி வழங்கப்பட்டுள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 பிராசஸர் கொண்ட மோட்டோ ஜி5 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. 
 
புகைப்படங்களை எடுக்க அதிநவீன 12 எம்பி பிரைமரி கேமரா, டூயல் எல்இடி பிளாஷ், 4K வீடியோ பதிவு செய்யும் வசதி மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்தனை சிறப்பம்சங்களை சக்தியூட்ட 3000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரியும் 4ஜி, வோல்ட்இ, 3ஜி, வை-பை மற்றும் ப்ளூடூத் உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது. 
 

 

மோட்டோ டிஸ்ப்ளே, ஷேக் ஜெஸ்ட்யூர் உள்ளிட்ட பிரபல மோட்டோ அம்சங்கள் வழங்கப்பட்டுள்ள மோட்டோ ஜி5 பிளஸ் ஸ்மார்ட்போனில் கூகுள் அசிஸ்டண்ட் வசதியும் வழங்கப்பட இருக்கிறது. கூகுள் அசிஸ்டண்ட் சேவையை வழங்கும் அப்டேட் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.