யமஹா ஃபேஸர் 250: வெளியீட்டு தேதி மற்றும் முழு தகவல்கள்

யமஹா ஃபேஸர் 250: வெளியீட்டு தேதி மற்றும் முழு தகவல்கள்

யமஹா நிறுவனத்தின் புதிய ஃபேஸர் 250 ஆகஸ்டு 21-ம் தேதி இந்தியாவில் வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. புதிய ஃபேஸர் 250 ஏற்கனவே யமஹா வெளியிட்ட FZ25 மாடலின் புதிய ஃபேஸர் மாடல் ஆகும். 
 
FZ25 மாடலில் வழங்கப்பட்ட இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், எக்சாஸ்ட், டெயில் லைட் மற்றும் எல்இடி ஹெட்லேம்ப், வீல்ஸ், சஸ்பென்ஷன், சேசிஸ் மற்றும் பிரேக் உள்ளிட்ட அம்சங்கள் புதிய ஃபேஸர் 250 மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது.
 
புதிய ஃபேஸர் 250 249சிசி ஃபியூயல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட இன்ஜின், 20 bhp, 8000 rpm மற்றும் 20 Nm டார்கியூ 6,000 rpm செயல்திறன் கொண்டிருக்கிறது. யமஹா 250 அதிவேகமாக செல்லும் திறன் பெறவில்லை என்றாலும், இன்ஜின் தினசரி பயன்பாட்டிற்கு ஏற்றதாக இருக்கிறது. 
 
\"\"
 
நகரங்களில் ஓட்ட சிறப்பான தரமும், நெடுஞ்சாலைகளில் வேகமாக செல்வதற்கு ஏற்ற டாப் ஸ்பீடு கொண்டுள்ளது. புதிய ஃபேஸர் 250 மாடலிலும் FZ25 கொண்டிருந்த அம்சங்களே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் முன்பக்கம் விண்ட்ஸ்கிரீன் சேர்த்து வாகனத்தின் மொத்த எடை 148 கிலோ வரை இருக்கும் என கூறப்படுகிறது.
 

 

முன்னதாக ஃபேஸர் 250 சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் பலமுறை இணையத்தில் கசிந்துள்ள நிலையில் புதிய ஃபேஸர் மாடலின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தியாவில் FZ25 விலை ரூ.1.19 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில் ஃபேஸர் 250 விலை ரூ.1.3 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.