யாருக்கெல்லாம் குடல் புற்றுநோய் வரும்

யாருக்கெல்லாம் குடல் புற்றுநோய் வரும்

குடல் புற்றுநோய் (Colorectal Cancer)... இது பெருங்குடல், சிறுகுடலில் ஏற்படும் புற்றுநோயைக் குறிக்கும். பெருங்குடலில் சாதாரண புண்ணில் தொடங்கி, காலப்போக்கில் அது புற்றுக்கட்டிகளாக உருவெடுத்துப் பாடாய்ப்படுத்தும். ஆரம்ப அறிகுறிகளை வைத்து இந்த நோயை அறிந்துகொள்வது கடினம் என்பதால் மெல்லக்கொல்லும் நோய் எனப்படுகிறது. 

உலக சுகாதார நிறுவனமும் புற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு நிறுவனமும் இணைந்து நடத்திய ஆய்வு ஒன்றின் முடிவில் நுரையீரல் புற்றுநோய்க்கு (Lung cancer) அடுத்தபடியாக அதிகம் அச்சுறுத்தும் புற்றுநோயாக இருப்பது குடல் புற்றுநோய் என்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே, யாருக்கெல்லாம் குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதை அறிந்துகொள்வது அவசியம்.

\"\"

* வயது 50-க்கு மேலானவர்கள்.

* புகைப்பழக்கம் உள்ளவர்கள்.

* மரபு வழியாக குடும்பத்தில் வேறு யாருக்கேனும் இந்தப் புற்றுநோய் இருந்தால்.

* உடல் பருமனாக உள்ளவர்கள்.

* அசைவ உணவுப் பிரியர்கள்.

* குறைவான அளவு நார்ச்சத்துள்ள உணவுகளை உண்பவர்கள்.

* மதுப்பழக்கம் உள்ளவர்கள்.

* மார்பகம் மற்றும் கருப்பைப் புற்றுநோய் உள்ள பெண்கள்.

* போதிய உடலுழைப்பு இல்லாதவர்கள்.

* நிறைவுற்ற கொழுப்பு (Saturated fats) உணவுகளை அதிகம் உண்பவர்கள். 

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.