யூடியூப் வீடியோவால் காணாமல் போன \'கனோவா\' நிறுவனம்

யூடியூப் வீடியோவால் காணாமல் போன \'கனோவா\' நிறுவனம்

அமெரிக்காவில் 2015-ம் ஆண்டு துவங்கப்பட்ட ஸ்டார்ட்-அப் நிறுவனமான கனோவா, வயர்லெஸ் முறையில் இயர்போன்களை தயாரித்து விரைவில் விற்பனை செய்ய இருந்தது. கனோவா வயர்லெஸ் இயர்போன்கள் அழகிய சார்ஜிங் கேஸ், வெளிப்புற சத்தத்தை கட்டுப்படுத்தும் வசதி உள்ளிட்டவை கொண்டிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.
 
கனோவா அறிவித்த அம்சங்கள் அனைவரையும் கவரும் வகையில் இருந்ததால், பெரும்பாலானோர் கனோவா இயர்போன்களை வாங்க முன்பதிவு செய்திருந்தனர். இரண்டு ஆண்டுகள் பல்வேறு பொறியாளர்களின் ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்ட கனோவா இயர்போன்கள் விமர்சனம், இந்த சாதனத்தை முன்பதிவு செய்தோர் மட்டுமின்றி, இணையவாசிகளிடமும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்டது. 
 
\"\"
 
அந்த வகையில், விற்பனைக்கு முன் இயர்போன்களை விமர்சனம் செய்ய யூடியூபில் பிரபலமான விமர்சகர்களுக்கு கனோவா சார்பில் வயர்லெஸ் இயர்போன்களை அனுப்பி வைக்கப்பட்டது. பல்வேறு விமர்சகர்களுக்கு கனோவா இயர்போன்கள் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், iTwe4kz என அறியப்படும் யூடியூப் சேனலுக்கும் கனோவா இயர்போன்கள் அனுப்பி வைக்கப்பட்டன. 
 
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆகஸ்டு 19-ம் தேதி கனோவா இயர்போன்களின் விமர்ச வீடியோ iTwe4kz சேனலில் வெளியிடப்பட்டது. இந்த ஒரு வீடியோ கனோவா நிறுவனத்தின் மூடுவிழாவிற்கு எடுத்துச் செல்லும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. 
 
கனோவா இயர்போன்களை விமர்சனம் செய்த iTwe4kz- என அறியப்படும் கோடி கிரவுச் இயர்போன்கள் தனக்கு எப்படி கிடைத்தது, இவை எவ்வாறு வேலை செய்கிறது, இதில் உள்ள நன்மை, தீமைகளை மிகவும் வெளிப்படையாக தெரிவித்திருந்தார். இத்துடன் இயர்போன் பயன்படுத்தும் போது இவர் சந்தித்த சவால்களையும் இடையே தெரிவித்தார்.  
 
\"\"
 
அமெரிக்காவில் 300 டாலர்களுக்கு விற்பனை செய்யப்பட இருந்த கனோவா இயர்போன்களில் பல்வேறு கோளாறுகள் இருப்பதையும், இதை வாங்காமல் இருப்பதே நல்லது என்ற வகையில் விமர்சனத்தை கோடி நிறைவு செய்திருந்தார். மேலும் கனோவா இயர்போன் நன்மைகளை மட்டும் தெரிவிக்க கனோவா சார்பில் 500 டாலர்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டதாகவும் கோடி தெரிவித்திருந்தார்.
 
கோடியின் விமர்சன வீடியோ வெளியான நான்கு நாட்களில் கனோவா நிறுவனம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. கனோவா வலைப்பக்கத்தில், அந்நிறுவன வரலாறு, எவ்வாறு உருவானது உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றிருந்தது. மேலும் நிறுவனத்தை தொடர்ந்து அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்ல தேவையன நிதியின்மை காரணமாக நிறுவனம் மூடப்படுவதாக அந்நிறுவன வலைப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.