ரத்தசோகை வராமல் தடுக்கும் ராஜ்மா

ரத்தசோகை வராமல் தடுக்கும் ராஜ்மா

உலர்ந்த பீன்ஸை லேசாக கடாயில் சூடு செய்த பின் தண்ணீரில் ஊற வைப்பது நலம். ஒரு சிட்டிகை சமையல் சோடா சேர்த்த நீரில் ஊற வைத்து, பிரஷர் குக்கரில் வைப்பதற்கு முன் கழுவி, புதிய தண்ணீர் ஊற்றினால் சீக்கிரம் வெந்து விடும். வெயிட் வைத்தபின் முதல் விசில் வந்ததும் தணலைக் குறைத்து 20 நிமிடங்களாவது வைக்க வேண்டும். ஆனால், இந்த முறையில் தயாமின் என்னும் வைட்டமின் அழியும். சத்துகளின் விவரத்தைப் படிக்கும் போது இதில் பி-காம்ப்ளெக்ஸ் வைட்டமினே இல்லை என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. 

சத்து விவரம் (100 கிராம் அளவில்) 

புரதம்    22.9 கிராம் 
கொழுப்பு    1.3 கிராம் 
தாதுக்கள்     3.2 கிராம் 
நார்ச்சத்து    4.8 கிராம் 
மாவுப் பொருள்  60.6 கிராம் 
சக்தி    346  கி.கலோரிகள் 
கால்சியம்    260 மில்லிகிராம் 
பாஸ்பரஸ்    410 மி.கி. 
இரும்புச்சத்து  5.1 மி.கி. 

இதில் சோடியமும் பொட்டாசியமும் அறவே இல்லை என்பது கவனிக்கத்தக்கது. சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் தாராளமாகச் சேர்த்துக் கொள்ளலாம். இதில் உள்ள புரதத்தில் எல்லா முக்கிய அமினோ அமிலங்களும் உள்ளன. அதனால் முழுப் புரதம் என்று எடுத்துக் கொள்ளலாம். 

இதில் கால்சியம், இரும்புச்சத்து சிறந்த அளவில் உள்ளதால் வளரும் குழந்தைகளுக்கும் ஏற்றது. வயதான பிறகு வரும் ஆஸ்டியோபொரோசிஸ் எனப்படும் எலும்புகள் அடர்த்தி இழக்கும்நிலையைத் தடுக்க அடிக்கடிஉபயோகிக்கலாம். 

ரத்தசோகை நோய் ஏற்படாமல் இருக்க இந்த பீன்ஸை அடிக்கடி உபயோகிக்கலாம். இதில் உள்ள நார்ச்சத்து பலவிதமாகவும் நமக்கு நன்மை புரியும். மலச்சிக்கலைத் தடுக்கும். கொலஸ்ட்ராலை குறைக்கும். நீரிழிவு உள்ளவர்கள், இதயநோய் உள்ளவர்கள் என்று எல்லோரும் இதை அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம்.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.