ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் ஸ்லீட் இந்திய விற்பனை துவங்கியது

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் ஸ்லீட் இந்திய விற்பனை துவங்கியது

இந்தியாவில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகம் செய்த ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் ஸ்லீட் விற்பனை துவங்கப்பட்டுள்ளது. 
 
ஆன்லைனில் ஜனவரி 12-ம் தேதி முதல் ஜனவரி 30-ம் தேதி வரை முன்பதிவு செய்யப்பட்ட ஹிமாலயன் ஸ்லீட் முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் புதிய ஹிமாலயன் ஸ்லீட் ராயல் என்ஃபீல்டு விற்பனை மையங்களில் விற்பனை செய்யப்படுகிறது. 
 
இந்தியாவில் முதலில் விற்பனையாகும் 500 ஹிமாலயன் ஸ்லீட் எடிஷனுடன் எக்ஸ்புளோர் கிட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எக்ஸ்புளோரர் கிட் 26-லிட்டர் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்ட அலுமினியம் பேனியர்கள், பேனியர் மவுண்டிங் ரெயில், ஆஃப்ரோடு ஸ்டைல் அலுமினியம் ஹேன்டிள்பார் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. 
 
 
ஹிமாலயன் ஸ்லீட் மாடலில் 411சிசி சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 24 பி.ஹெச்.பி. @6500 ஆர்.பி.எம்., 32 என்.எம். டார்கியூ @4500 ஆர்.பி.எம் செயல்திறன் மற்றும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. புதிய அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் மணிக்கு 120 கிலோமீட்டருக்கும் அதிக வேகத்தில் செல்லும் திறன் கொண்டதாகும்.
 
புதிய பைக் வாங்வோருக்கு இரண்டு ஆண்டுகள் வாரண்டி ராயல் என்ஃபீல்டு சார்பில் வழங்கப்படுகிறது. ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் ஸ்லீட் மாடல் அந்நிறுவனத்தின் வழக்கமான மாடலை விட ரூ.28,000 வரை அதிகமாகும். எக்ஸ்புளோரர் கிட் கொண்ட ஹிமாலயன் ஸ்லீட் விலை ரூ.2.12 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில் தற்சமயம் ஸ்லீட் எடிஷன் மட்டும் விற்பனை செய்யப்படுகிறது. 
 
ஹிமாலயன் ஸ்லீட் மாடலில் நீண்ட தூர பயணங்களுக்கு ஏதுவாக முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இதன் பிரேக்கிங் அம்சங்கள் முன்பக்கம் 300 மி்ல்லிமீட்டர் டிஸ்க், பின்புறம் 240 மில்லிமீட்டர் டிஸ்க் பிரேக் பார்த்து கொள்கிறது. 
 

 

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் இந்தியாவின் விலை குறைந்த அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் ஆகும். இந்த மோட்டார்சைக்கிளின் முன்பக்கம் 21 இன்ச் ஸ்போக் வீல், பின்புறம் 18 இன்ச் சக்கரம் கொண்டுள்ளது. இதன் கிரவுன்ட் கிளியரன்ஸ் 220 மில்லிமீட்டர் கொண்டிருக்கிறது.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.