ரியல்மி X ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

ரியல்மி X ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

ஒப்போவின் துணை பிராண்டு ரியல்மி விரைவில் புதிய ஸ்மார்ட்போன்களை சீனாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. ரியல்மியின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ரியல்மி X சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மே 15 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

 

புதிய ரியல்மி X ஸ்மார்ட்போன்களின் அறிமுக தேதி வெய்போ தளத்தில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ரியல்மி X ஸ்மார்ட்போனுடன் சாதனத்தின் லைட் வெர்ஷன் ரியல்மி X யூத் எடிஷன் அல்லது ரியல்மி X லைட் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. 

 

முன்னதாக ரியல்மி X ஸ்மார்ட்போனின் விவரங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகியிருக்கின்றன. சமீபத்தில் ரியல்மி X இந்திய வெளியீட்டை உறுதிப்படுத்தும் வகையில் பி.ஐ.எஸ். சான்று பெற்றிருந்தது. இதுதவிர ஸ்மார்ட்போனிற்கான டீசரை ரியல்மி அவ்வப்போது வெளியிட்டு வந்தது. 

 

அதன்படி வெளியான டீசர் வீடியோ ஒன்றில் ரியல்மி X ஸ்மார்ட்போன் பாப்-அப் ரக செல்ஃபி கேமரா கொண்டிருக்கும் என தெரியவந்தது. இது ஒப்போவின் எஃப்11 ப்ரோ மாடலில் வழங்கப்பட்டிருந்ததை போன்று இயங்கும் என தெரிகிறது. இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களில் புதிய ஸ்மார்ட்போன் RMX1901 என்ற மாடல் நம்பர் கொண்டு உருவாகி வருவதும் இது கிரேடியன்ட் கலர் ஃபினிஷ் மற்றும் நீல நிறம் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

சிறப்பம்சங்களை பொருத்தவரை ரியல்மி X ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர், 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி அல்லது 128 ஜி.பி. மெமரி, 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி போன்ற வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது. 

 

விலையை பொருத்தவரை ரியல்மி X பேஸ் மாடல் விலை RMB 1,599 (இந்திய மதிப்பில் ரூ.16,500) என்றும் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை RMB 1,999 (இந்திய மதிப்பில் ரூ.20,500) வரை நிர்ணயம் செய்யப்படலாம். இத்துடன் ஃபுல் ஸ்கிரீன் வடிவமைப்பு கொண்ட முதல் ரியல்மி ஸ்மார்ட்போனாக இது இருக்கும்.

 

இதுதவிர புதிய ரியல்மி ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், டூயல் பிரைமரி கேமரா: 48 எம்.பி. + 5 எம்.பி. டெப்த் சென்சார் வழங்கப்படுகிறது. இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் அம்சங்கள் கிட்டத்தட்ட ஒப்போ எஃப்11 ப்ரோ போன்றே தெரிகிறது.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.