ரிலீசிற்கு முன்னரே ஹிட் அடித்த ஒன்பிளஸ் 5

ரிலீசிற்கு முன்னரே ஹிட் அடித்த ஒன்பிளஸ் 5

ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் சில தினங்களில் வெளியிடப்படவுள்ளது. தற்சமயம் அதிகம் எதிர்பார்க்கப்படும் புதிய ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போன் வெளியீட்டிற்கு முன்னரே சீனாவின் JD.com தளத்தில் முன்பதிவு துவங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து முன்பதிவில் ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போனிற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 
 
அதன்படி ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போனினை ஏற்கனவே சுமார் 1.5 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். வெளியீட்டிற்கு முன் அறிவிக்கப்பட்டுள்ள முன்பதிவில் வாடிக்கையாளர்கள் எவ்வித முன்பணமும் செலுத்த வேண்டிய அவசியமில்லை. எனினும் வெளியீட்டிற்கு முன் இத்தகைய முன்பதிவுகளை ஒன்பிளஸ் பெற்றுள்ளது.
 
\"\"
 
ஒன்பிளஸ் 5 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
 
* 5.5 இன்ச் ஃபுல்-எச்டி 1080x1920 பிக்சல் டிஸ்ப்ளே
* 6 ஜிபி, 8 ஜிபி ரேம் 
* 64 ஜிபி, 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
* 20 எம்பி, 16எம்பி டூயல் கேமரா அமைப்பு
* 16 எம்பி செல்ஃபி கேமரா
* 3000 எம்ஏஎச் பேட்டரி
* என்எஃப்சி, ப்ளூடூத் 5.0
 
சர்வதேச சந்தைகளில் புதிய ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போனின் விலை 479 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.30,800 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
முன்னதாக வெளியான தகவல்களில் ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போனின் விலை ரூ.32,999 முதல் துவங்கும் என்றும் 8 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட மாடல் ரூ.37,999 என நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்பட்டது.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.