ரிலையன்ஸ் ஜியோவின் இலவச பீச்சர் போன்: புதிய கோரிக்கை வைக்கும் வோடபோன்

ரிலையன்ஸ் ஜியோவின் இலவச பீச்சர் போன்: புதிய கோரிக்கை வைக்கும் வோடபோன்

இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி பீச்சர்போன் டெலிகாம் சந்தையின் வருவாயினை மேலும் குறைக்கும் என நாட்டின் இரண்டாவது பெரிய டெலிகாம் நிறுவனமான வோடபோன் இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது. புதிய இலவச போன் ஏற்படுத்த இருக்கும் பாதிப்புகளை சுட்டிக்காட்டி அரசாங்கத்திடம் சிறப்பு சலுகைகளை வழங்க வோடபோன் கேட்டுக் கொண்டுள்ளது. 

வோடபோனின் வருவாய் ஜூன் மாதத்துடன் நிறைவுற்ற காலாண்டில் 3.41% சரிந்துள்ளதாக மத்திய டெலிகாம் நிறுவனத்திற்கு வோடபோன் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

நாட்டின் புது டெலிகாம் நிறுவனமான ஜியோ தொடர்ந்து மலிவு விலை சலுகைகளை அறிவித்து வருகிறது. மேலும் ஜியோ இலவச அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்களுடன் முற்றிலும் இலவசமாக வழங்க இருக்கும் ஜியோ பீச்சர் போன்கள் டெலிகாம் நிறுவனங்களின் வருவாயினை மேலும் குறைக்கும் என வோடபோன் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

\"\"

இத்துடன் சர்வதேச சேவை உதவி கட்டணத்தை (Universal Service Obligation) 5 சதவிகிதத்தில் இருந்து 3 சதவிகிதமாக குறைக்க வேண்டும் என்றும், வட்டித் தொகையை குறைத்து ஸ்பெக்ட்ரம் கட்டணத்தையும் குறைக்க வேண்டும் என மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையத்திடம் வோடபோன் கோரிக்கை விடுத்துள்ளது. 

இந்திய டெலிகாம் சந்தையில் ஏற்பட்டிருக்கும் நிதி நெருக்கடியை சமாளிக்கும் நோக்கில் ஆகஸ்டு 16 மற்றும் ஆகஸ்டு 17-ம் தேதிகளில் நடைபெற இருக்கும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட இருக்கிறது. எனினும் டெலிகாம் சந்தையில் ஏற்பட்ட நிதி நெருக்கடி மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது என்றும், அதிகப்படியான மாற்றங்களுக்கு அவசியம் இருக்காது என தெரிவித்துள்ளனர்.   

ஜியோ வரவுக்கு பின் டெலிகாம் சந்தையில் ஏற்பட்ட நெருக்கடி மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருவதை டெலிகாம் வல்லுநர்களும் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு நிறுவனமும் ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து பெறும் வருவாய் உயர்ந்து இருப்பது, சந்தையில் வகிக்கும் பங்கு மற்றும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை உள்ளிட்டவை நிறுவனங்களின் வருவாய் இழப்பை குறைத்துள்ளது.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.