ரூ.2.3 கோடி விலையில் செல்போன்... ஹெலிகாப்டரில் டெலிவரி

ரூ.2.3 கோடி விலையில் செல்போன்... ஹெலிகாப்டரில் டெலிவரி

ஆடம்பர பொருட்களை விரும்பி வாங்கும் மக்களுக்கென இங்கிலாந்தைச் சேர்ந்த வெர்டு (Vertu) என்ற நிறுவனம் ரூ.2.3 கோடி விலையில் புதிய செல்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.

கோடிகளில் விலை நிர்ணயம் செய்யப்படும் அளவுக்கு இந்த செல்போனில் அப்படி என்ன விசேஷம் என்று கேட்கிறீர்களா?. அதில் பொருத்தப்பட்டுள்ள விலை உயர்ந்த பாகங்களே அதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. வெர்டு சிக்னேச்சர் கோப்ரா (Vertu Signature Cobra) என்று பெயரிடப்பட்டுள்ள அந்த போனில் 388 பாகங்கள் உள்ளன. ஸ்மார்ட் போன் அல்லாமல் பீச்சர் போன் வடிவில் வெளியிடப்பட்டுள்ள இந்த செல்போன் வடிவத்தினை பாம்பு ஒன்று தாங்கி நிற்பது போல உருவாக்கப்பட்டுள்ளது. அந்த பாம்பு 439 மாணிக்கங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேநேரம் பாம்பின் கண்கள் மரகதத்தால் இழைக்கப்பட்டுள்ளன. இந்த மரகதங்கள் ஒரு காரட் விலை இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.2 முதல் ரூ.3 லட்சம் என்று மதிப்பிடப்படுகிறது.

லிமிடெட் எடிஷனாகத் தயாரிக்கப்படும் இந்தவகை செல்போன்கள் உலக அளவில் வெறும் 8 மட்டுமே விற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் ஒன்று மட்டுமே விற்பனைக்காக அந்நாட்டின் பிரபலமான ஜேடி.காம் என்ற இணையதளத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதில், மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் வெர்டு சிக்னேச்சர் கோப்ரா மாடல் செல்போன்களை ஹெலிகாப்டர் மூலம் டெலிவரி செய்ய தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.