ரூ.8,490க்கு அறிமுகமான ஒப்போ A1k சிறப்புகளை அறியலாம்

ரூ.8,490க்கு அறிமுகமான ஒப்போ A1k சிறப்புகளை அறியலாம்

பட்ஜெட் விலையில் அற்புதமான 4ஜி மொபைல் போன் மாடலை ஒப்போ நிறுவனம், ஒப்போ A1k என்ற பெயரில் 8,490 ரூபாய்க்கு இந்தியாவில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. முன்பாக இந்த மொபைல் போன் ரஷ்யாவில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

ஒப்போ ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரின் புதிய ஏ1கே போனில் 2 மடங்கு வேகமாக சார்ஜிங் ஆகின்ற அம்சத்துடன், சமீபத்தில் வெளியான ரெட்மி 7, ரியல்மி சி2, ரியல்மி 3 போன்ற மாடல்களுக்கு சவாலாக விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.

ஒப்போ A1k சிறப்புகள்

4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் கேமராவில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களை பெற்றுள்ள இந்த மொபைல் பன் முதற்கட்டமாக ஆஃப்லைன் சந்தையில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

6.1 அங்குல முழு எச்டி வாட்டர் டிராப் டிஸ்பிளே வடிவமைப்புடன், 720×1520 பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் கொண்ட இந்த மாடலை இயக்க ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 பயன்படுத்தப்பட்டு, 2ஜிபி ரேம் உடன் 32 ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது.

8 மெகாபிக்சல் ரியர் கேமரா கொண்டுள்ள இந்த போனில் செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்கு கேமரா 5 மெகாபிக்சல்  கேமரா சென்சார் வழங்கப்பட்டுள்ளது. வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் மற்றும் ஆண்ட்ராய்டு பை கொண்டு இயக்கப்படுகின்றது.

 

OPPO A1k specifications

 • 6.1 அங்குல (1560 × 720 pixels) HD+ display with Waterdrop Notch, கார்னிங் கொரில்லா கிளாஸ்
 • Octa-Core MediaTek Helio P22 (MT6762R) 12nm processor with IMG PowerVR GE8320 GPU
 • 2GB RAM, 32GB storage,  256GB மைக்ரோ எஸ்டி
 • ஆண்ட்ராய்டு 9.0 (Pie) with ColorOS 6.0
 • 8MP பின் கேமரா LED flash, f/2.2 aperture
 • 5MP முன் கேமரா f/2.0 aperture
 • இரட்டை சிம் கார்டு
 • 3.5 mm audio jack, FM Radio
 • அளவுகள்: 154.5 x73.8x 8.4mm; எடை: 170g
 • Dual 4G VoLTE, WiFi 802.11 b/g/n, Bluetooth 4.2, GPS/GLONASS, Micro USB Port
 • 4000mAh பேட்டரி உடன் ஃபாஸ்ட் சார்ஜிங்
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.