ரெட்ரோ வடிவமைப்பு கொண்ட லெனோவோ தின்க்பேட் அறிமுகம்

ரெட்ரோ வடிவமைப்பு கொண்ட லெனோவோ தின்க்பேட் அறிமுகம்

லெனோவோ நிறுவனத்தின் புதிய தின்க்பேட் சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. வியாபார ரீதியிலான புதிய லேப்டாப்கள் முதன்முதலாக இரண்டு ஆண்டுகளுக்கு முன் டீசராக வெளியிடப்பட்டது. டீசரில் தின்க்பேட் ஆண்டுவிழா பதிப்பு 25 அல்லது தின்க்பேட் ரெட்ரோ என அழைக்கப்படும் என்றும் இவை தயாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது.

புதிய லேப்டாப்களில் ஏழு அடுக்கு கீபோர்டு கொண்டிருக்கிறது. இதில் பிரத்தியேக வால்யூம் பட்டன், ஸ்டேட்டஸ் எல்இடி, கிளாசிக் என்டர் கீ, பல்வேறு நிறம் கொண்ட தின்க்பேட் லோகோ மற்றும் ஆண்டுவிழா சிறப்பு எடிஷனை குறிக்கும் பிரான்டிங் மற்றும் பேக்கேஜிங் கொண்டிருக்கும். 
 
ஹார்டுவேர் அம்சங்களை பொருத்த வரை தின்க்பேட் T470 மாடலில் இன்டெல் கோர் i7-7500U CPU, Nvidia GeForce 940MX GPU, 16 ஜிபி ரேம், 512 ஜிபி SSD வழங்கப்பட்டுள்ளது. 14.0 இன்ச் ஃபுல் எச்டி டச்ஸ்கிரீன் கொண்டுள்ளதோடு வைபை, ப்ளூடூத் 4.2, தண்டர்போல்ட் 3 போர்ட், ஸ்டீரியோ ஸ்பீக்கர், டூயல் மைக் வழங்கப்பட்டுள்ளது. 

\"\"

புதிய தின்க்பேட் 1.6 கிலோ எடை கொண்டுள்ள தின்க்பேட் 13.9 மணி நேர பேட்டரி பேக்கப் வழங்கும் என்றும் இதன் விலை 1899 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.1,23,600 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

லெனோவோ தலைமை வடிவமைப்பாளர் டேவிட் ஹில் 2015-ம் ஆண்டு முதல் பலமுறை நடத்திய கருத்துக் கணிப்புகளில் கடந்த ஆண்டுகளில் லேப்டாப்களில் கைவிடப்பட்ட அம்சங்கள் மற்றும் வடிவமைப்புகளை திரும்ப வழங்குவது குறித்து பல்வேறு கேள்விகள் வாடிக்கையாளர்களிடம் கேட்கப்பட்டது. இதில் ஸ்கிரீன் அளவுகள், ஆஸ்பெக்ட் ரேஷியோ, கீபோர்டு இன்புட், பேக்லிட் ஆப்ஷன் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளது.

லெனோவோவின் 700C தின்க்பேட் சாதனம் அக்டோபர் 5, 1992-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அன்று முதல் இன்று வரை சுமார் 13 கோடி தின்க்பேட் சாதனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஐபிஎம் நிறுவனம் லெனோவோவிடம் விற்பனை செய்த பின்பும் புதிய வடிவமப்புகளுடன் கூடிய புதிய மாடல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. 

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.