ரோல்ஸ் ராய்ஸ் ஃபேண்டம் VIII அறிமுகம் செய்யப்பட்டது

ரோல்ஸ் ராய்ஸ் ஃபேண்டம் VIII அறிமுகம் செய்யப்பட்டது

ஆட்டோமொபைல் சந்தையில் பல்வேறு டீசர் மற்றும் அதிகப்படியான ஸ்பை ஷாட்களை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஃபேண்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வெளிப்புறம் மற்றும் உள்புறங்களில் அதிகப்படியான மாற்றங்களுடன் வெளியாகியுள்ள புதிய ரோல்ஸ் ராய்ஸ் வழக்கமான பிரம்மாண்ட தோற்றத்துடன் அழகாக காட்சியளிக்கிறது. 
 
கடந்த ஆறு ஆண்டுகளாக தயாரிப்பு பணிகளில் இருந்த நிலையில் புதிய ஃபாண்டம் பீஸ்போக் அலுமினியம் ஸ்பேஸ்ஃபிரேம் கொண்ட முதல் மாடல் ஆகும். இதேபோன்ற அலுமினியம் வடிவமைப்பு ரோல்ஸ் ராய்ஸ் கலினன் மாடலிலும் வழங்கப்படுகிறது. 
 
புதிய ஃபாண்டம் 6.75 லிட்டர் ட்வின்-டர்போசார்ஜ்டு V12 இன்ஜின் கொண்டுள்ளது. இந்த இன்ஜின் 570hp 5,000rpm செயல்திறன் மற்றும் 900Nm பீக் டார்கியூ 1,800rpm-இல் இருந்து பெறுகிறது. புதிய செடான் 2,625 கிலோ எடை கொண்டிருந்தாலும், மணிக்கு 0-100 கிலோமீட்டர் வேகத்தில் வெறும் 5.3 நொடிகளில் பிடிக்கும் என்றும் அதிகபட்சம் மணிக்கு 250 கிலோமீட்டர் வேகத்திலும் செல்லும் படி மின்சார முறையில் லாக் செய்யப்பட்டுள்ளது.  
 
\"\"
 
புதிய வகை வடிவமைப்பு, ஆடம்பரத்திற்கு ஏற்ற கலை மற்றும் அதிநவீன தொழில்நுட்பம் வாகனத்தின் அதிகபட்ச வசதியையும் உறுதியை வழங்குகிறது. முழுமையான அலுமினியம் ஸ்பேஸ்ஃபிரேம் முந்தைய மாடலை விட அதிக கடினமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய மாடல்களை விட அதிக எளிமையாக கட்டுப்படுத்தும் வகையில் புதிய மாடல் மேம்படுத்தப்பட்டுள்ளது.
 
இத்துடன் புதிய சேசிஸ் தொழில்நுட்பம், நான்கு-வீல் ஸ்டியரிங் முன்பை விட அதிக கண்ட்ரோல் மற்றும் உறுதியை வழங்குகிறது. உயரத்தை பொருத்த வரை முந்தைய மாடலை விட 8 மில்லிமீட்டர் உயரமாகவும், 29 மில்லிமீட்டர் அகலமாகவும், 77 மில்லிமீட்டர் நீலமாக இருக்கிறது.
 
புதிய எட்டாம் தலைமுறை ரால்ஸ் ராய்ஸ் ஃபேண்டம் 2018-ம் ஆண்டு சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படும் என்றும், இந்திய விற்பனை சார்ந்து எவ்வித தகவலும் இல்லை.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.