லெவல் 4 வகையைச் சேர்ந்த தானியங்கி கார்களை உருவாக்கும் இன்டெல்

லெவல் 4 வகையைச் சேர்ந்த தானியங்கி கார்களை உருவாக்கும் இன்டெல்

இன்டெல் நிறுவனம் லெவல் 4 ரக தானியங்கி கார்களை உருவாக்க இருப்பதாகவும் இந்த ஆண்டு இறுதியில் அவற்றை சோதனை செய்ய திட்டமிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முதற்கட்டமாக அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் சோதனை செய்யப்படுகிறது.
 
சமீபத்தில் மொபைல் ஐ எனும் நிறுவனத்தை 1530 கோடி அமெரிக்க டாலர்களுக்கு கைப்பற்றியதைத் தொடர்ந்து தானியங்கி கார்களை தயாரிப்பது சார்ந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கம்ப்யூட்டர் விஷன், சென்சிங், ஃபியூஷன், மேப்பிங், டிரைவிங் பாலிசி மற்றும் 5ஜி தொழில்நுட்பங்களை மொபைல் ஐ நிறுனத்திடம் இருந்து பயன்படுத்த இருக்கிறது.
 
\"\"
 
இன்டெல் புதிய திட்டத்தில் பல்வேறு கார் நிறுவனங்கள், விதவிதமான மாடல்கள் மற்றும் அவை கொண்டிருக்கும் தொழில்நுட்ப வசதிகளை விளக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 100-க்கும் அதிகமான ஆட்டோமொபைல் நிறுவனங்களின் கார் மாடல்களில் இன்டெல் தானியங்கி முறை இன்ஸ்டால் செய்யப்படுகிறது.   
 
இன்டெல்-மொபைல் ஐ தொழில்நுட்பம் கொண்டு இயங்கும் கார்கள் 2018-ம் ஆண்டு வாக்கில் பயன்பாட்டிற்கு வெளியிட இன்டெல் திட்டமிட்டுள்ளது. முன்னதாக குவால்காம் மற்றும் என்விடியா போன்ற நிறுவனங்கள் தானியங்கி வாகனங்ளை உருவாக்க திட்டமிட்டுள்ளதைத் தொடர்ந்து இன்டெல் நிறுவனமும் தானியங்கி வாகனங்களை தயாரிக்க இருப்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.