லேண்ட் ரோவர் டிஸ்கவரி: விலை மற்றும் சிறப்பம்சங்கள்

லேண்ட் ரோவர் டிஸ்கவரி: விலை மற்றும் சிறப்பம்சங்கள்

லேண்ட் ரோவர் இந்தியா நிறுவனம் விரைவில் வெளியிட இருக்கும் 2017 டிஸ்கவரி மாடலுக்கான முன்பதிவுகளை துவங்கியுள்ளது. 2017 லேண்ட் ரோவர் டிஸ்கவரி மாடலின் விலை ரூ.68.05 லட்சத்தில் இருந்து துவங்குகிறது. தற்போதைய எஸ்.யு.வி. வகைகளின் விலையை விட அதிகம் செலவழிக்க வேண்டியுள்ளது. 
 
புதிய 2017 டிஸ்கவரி டிஸ்கவரி ஸ்போர்ட் மற்றும் ரேஞ்ச் ரோவர் மாடல்களுக்கு மத்தியில் அமைந்துள்ளது. இந்தியாவில் புதிய ஆடம்பர எஸ்.யு.வி. மாடல் அக்டோபர் 28, 2017-இல் வெளியாகி அக்டோபர் இறுதியில் அல்லது நவம்பர் மாதத்தில் வெளியிடப்படலாம்.    
 
டிஸ்வகரி விஷன் கான்செப்ட் மாடலைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ள புதிய லேண்ட் ரோவர் டிஸ்கவரி நியூ யாரக் நகரில் நடைபெற்ற ஆட்டோ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. ஏழு பேர் செல்லக் கூடிய எஸ்.யு.வி. இந்திய சந்தையில் மூன்றாம் தலைமுறை மாடல் ஆகும். 
 
\"\"
 
வழக்கமான ரூஃப்லைன் மாடலைத் தழுவி வடிவமைக்கப்பட்டுள்ள 2017 லேண்ட் ரோவர் உள்பக்கம் வாடிக்கையாளர்களுக்கு அதிக சவுகரியத்தை வழங்குகிறது. எனினும் வழக்கமான பாக்ஸி வடிவமைப்பை தவிர்த்து புதிய ரக வடிவமைப்பை வழங்கியுள்ளது. 
 
இந்தியாவில் புதிய லேண்ட் ரோவர் டிஸ்கவரி Si6 மற்றும் TDV6 ட்ரிம்களை கொண்டுள்ளது. இது சூப்பர்சார்ஜ்டு பெட்ரோல் 3-லிட்டர் V6 இன்ஜின் கொண்டு 335 bhp மற்றும் 450 Nm டார்கியூ செயல்திறன் கொண்டுள்ளது. மற்றொரு புறம் 6-சிலிண்டர் டீசல் மோட்டார் 254 bhp மற்றும் 600 NM டார்கியூ கொண்டுள்ளது. 
 
இன்டெலிஜன்ட் சீட் ஃபோல்டு தொழில்நுட்பம், சென்ட்ரல் டச் ஸ்கிரீன், 14 ஸ்பீக்கர் டிஜிட்டல் சரவுண்டு சிஸ்டம், இன் கண்ட்ரோல் டச் ப்ரோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், நான்கு 12 வோல்ட் சார்ஜிங் பாயின்ட்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
 
புதிய 2017 லேண்ட் ரோவர் டிஸ்கவரி வால்வோ நிறுவனத்தின் XC90, ஆடி கியூ7 மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் GLS உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.