வங்கி சேவையில் பேடிஎம்

வங்கி சேவையில் பேடிஎம்

பேடிஎம் பேமென்ட் வங்கி வணிக செயல்பாட்டினை உத்திரபிரதேசத்தில் இருந்து தொடங்கி இருக்கிறது. \'பேடிஎம் பேமென்ட் வங்கி வட கிழக்கு மாநிலங்களில் பெருமளவில் விரிவாக்கம் செய்யப்படும் என்றும், ஒரு லட்சம் பேர் வங்கி பணிக்கு நியமிக்கப்பட உள்ளதாகவும்\' தெரிவித்து இருக்கிறார் இதன் நிறுவனர் விஜய் சேகர் சர்மா.

இந்த வங்கி நிறுவனத்திற்கு ஒன் 97 கம்யூனிக்கேஷன்ஸ் லிமிடேட் மற்றும் ஒன் 97 கம்யூனிக்கேஷன் இந்தியா நிறுவனமும் இணைந்து 218 கோடி ரூபாய் முதலீடு செய்கிறது. இதில் பேடிஎம் நிறுவனத்தின் விஜய் சேகர் சர்மாவும் முதன்மையாக முதலீட்டாளராக இருக்கிறார். இவரது கைவசத்தில் 51 சதவீத பங்குகள் உள்ளன. இவர் 325 கோடி ரூபாயை முதலீடு செய்து இருக்கிறார்.

சீனாவில் உள்ள இ-காமர்ஸ் நிறுவனமான அலிபாபாவும், அதன் துணை நிறுவனமான அலிபே நிறுவனமும் ஒன் 97 கம்யூனிக்கேஷன் நிறுவனத்தின் 41% பங்குகளை வைத்திருக்கிறது. இந்த நிறுவனங்கள் மேலும் மறைமுகமாக முதலீடு செய்யவும் வாய்ப்பு இருக்கிறது என்று கருதப்படுகிறது.

பேடிஎம் வங்கி ஏப்ரல் மாதத்தில் இருந்து செயல்படுவதாக திட்டம் இருந்தது. ஆனால், இதனுடைய போட்டியாளராக ஏர்டெல் நிறுவனமும், அஞ்சல் துறை நிறுவனமும் செயல்பட ஆரம்பித்து பெருமளவில் விளம்பரத்தையும், விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறது. இதனால் பேடிஎம் வங்கியும் உடனடியாக தொடங்கி இருக்கிறார்கள்.

பேடிஎம் வங்கி தன்னுடைய வேலெட் வணிகத்தை வங்கி செயல்பாட்டுடன் இணைக்கும் முடிவில் இருக்கிறது. இதன் மூலம் 200 மில்லியன் கணக்குகளை ஓராண்டில் துவங்கவும் திட்டமிட்டு இருக்கிறது. வங்கியின் செயல்பாட்டில் கடன் வழங்கவும், சொத்து மேலாண்மை மற்றும் இன்ஷூரன்ஸ் போன்றவையும் செய்ய திட்டமிட்டு இருக்கிறது.

தற்போது ரிசர்வ் வங்கி ஒரு லட்சம் வரை ஒரு வாடிக்கையாளர் டெபாசிட் செய்வதற்கு அனுமதி வழங்கி இருக்கிறது. அதே சமயம் கடன் மற்றும் கிரேடிட் கார்டு விநியோகத்திற்கு அனுமதி வழங்கவில்லை. அதே சமயத்தில் நடப்பு மற்றும் சேமிப்பு கணக்கிற்கு வட்டி விகிதத்தை அவர்களே நிர்ணயித்துக்கொள்ளவும் அனுமதித்து இருக்கிறது. ஏடிஎம் கார்டு, டெபிட் கார்டு, ஆன்லைன் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்க் போன்றவற்றிற்கும் அனுமதி வழங்கி இருக்கிறது.

மே மாதத்தில் \'பைனோ போடெக்\', \'என்எஸ்டிஎல்\' மற்றும் முகேஷ் அம்பானியின் \'ரிலையன்ஸ்\' நிறுவனமும் வங்கி சேவையினை ஆரம்பிக்க உள்ளது.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.