வருகிறது டுகாட்டியின் என்ட்ரி லெவல் சூப்பர் பைக்!

வருகிறது டுகாட்டியின் என்ட்ரி லெவல் சூப்பர் பைக்!

நம்மில் பலருக்கு, சூப்பர் பைக்கை ஓட்டிப் பார்க்க ஆசையாக இருக்கும்; ஆனால் பவர்ஃபுல்லான அந்த பைக்கை ஓட்டுவதற்குக் கூடவே கொஞ்சம் பயமும் இருக்கும். இதற்கான தீர்வாக, தனது மான்ஸ்ட்டர் 797 பைக்கை, இந்தியாவில் வருகின்ற ஜூன் 14 அன்று 3 கலர்களில் (Star White Silk, Ducati Red, Dark Stealth) அறிமுகப்படுத்துகிறது,
 
இத்தாலியைச் சேர்ந்த பிரபல சூப்பர் பைக் நிறுவனமான டுகாட்டி! உத்தேசமாக டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையான 7.82 லட்சத்துக்குக் களமிறங்கும் இந்த பைக்கில், ஸ்க்ராம்ப்ளர் சீரிஸ் பைக்கில் இருக்கும் அதே 803சிசி L-Twin இன்ஜின் - 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் அமைப்பைப் பொருத்தியுள்ளது டுகாட்டி.
 
 
\"\"
 
 
இது 75bhp பவர் - 6.89kgm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. இது கேட்பதற்கு அதிகமாகத் தெரிந்தாலும், பைக்கின் 193 கிலோ எடை மற்றும் சீட் உயரம் வெறும் 805மிமீ என்பதால், ராயல் என்ஃபீல்டு பைக்குகளை ஓட்டியவர்கள் கூட, மான்ஸ்ட்டர் 797 பைக்கை ஈஸியாக ஓட்ட முடியும் எனத் தோன்றுகிறது.
 
அதற்கேற்ப டுகாட்டி தனது 795/796 பைக்கைப் போலவே இதை டிசைன் செய்திருக்கிறது. சீட்டுக்கு அடியில் USB சாக்கெட் இருப்பது, மொபைலை சார்ஜ் செய்வதற்கு ஏற்றதாக இருக்கிறது;
 
 
\"\"
 
 
CBU முறையில், தாய்லாந்தில் இருக்கும் இந்நிறுவனத்தின் தொழிற்சாலையில் இருந்து, இந்த பைக் இந்தியாவுக்கு இறக்குமதி செய்து விற்பனைக்கு வருகிறது. பெனெல்லி TNT 600i, கவாஸாகி Z650, ஹார்லி டேவிட்சன் Iron 883, ட்ரையம்ப் T100 ஆகிய பைக்குகளுக்குப் போட்டியாக, மான்ஸ்ட்டர் 797 பைக் பொசிஷன் செய்யப்பட்டுள்ளது.
 
இதில் மான்ஸ்ட்டர் 821 பைக்கில் இருக்கும் ட்ரெல்லிஸ் ஃப்ரேம், ஸ்லிப்பர் கிளட்ச், LCD டிஸ்பிளே, LED ஹெட்லைட் - டெயில் லைட், 43மிமீ Kayaba USD - அட்ஜஸ்ட் செய்யக்கூடிய Sachs மோனோஷாக் சஸ்பென்ஷன், ஏபிஎஸ் உடனான Brembo டிஸ்க் பிரேக்ஸ் ஆகியவை இடம்பெற்றுள்ளன! 
 
\"\"
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.