
வறட்சியில் இருந்து பயிர்களை பாதுகாப்பது எப்படி? வேளாண்மை இணை இயக்குனர் விளக்கம்
ஈரோடு மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் சராசரி மழையை விட 60 சதவீதம் குறைவாக பெய்து உள்ளது. பவானி சாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் போது மான மழை பெய்யாததால் மாவட்டம் முழுவதும் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. மானாவாரி பயிர்கள் அனைத்தும் தண்ணீர் பற்றாக்குறைவால் மகசூல் குறைந்து கால் நடைகளுக்கும் தீவனத் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. கிணறுகள், ஆழ் துளை கிண றுகள் மூலம் சாகுபடி செய்யப்படும் பயிர்களிலும் தண்ணீர் பற்றாக்குறையால் மகசூல் இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே வறட்சியின் கோரப் பிடியில் இருந்து பயிர்களை பாதுகாக்க கீழ் வரும் தொழில் நுட்பங்களை விவசாயிகள் கடைபிடிக்க லாம்.
கரும்புத் தோகை : கிணறு, ஆழ்துளை கிணறு மற்றும் இதர நீர்ப்பாசன ஆதாரங்களில் கிடைக்கும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். மின்சாரம் உள்ள போது தவறா மல் தண்ணீர் பாய்ச்சுதலை உறுதி செய்ய வேண்டும்.
சோலார் போன்ற சூரிய சக்தியால் இயங்கும் மோட் டார்களை பயன்படுத்தலாம். இதற் காக வேளாண்மை பொறியியல் துறை மூலம் வழங்கப்படும் மானியத்தை விவசாயி கள் பெற்று பயன் அ டையலாம். நெகிழி அல்லது கரும்புத் தோகை போன்றவற்றை வைத்து மூடாக்கு ஏற்படுத்துவதன் மூலம் நீர் ஆவியாதலை தடுக்க முடியும்.
இதனால் மண்ணில் ஈரப்பதம் தொடர்ந்து இருக்கும். இலை வழி என்று அழைக்கப் படும் பாக்டீரியா கரைசலை பூம் தெளிப்பான்கள் மூலம் தெளிக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு 200 மில்லி லிட்டர் கரைசலை இலைப்பரப்பில் நன்றாக படும் வகையில் தெளிக்க வேண்டும். மேலும், கதிர் வெளிவரும் நிலையிலும் தெளிக்கலாம். தமிழ் நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி நிலையங்களில் பி.பி.எப்.எம். கிடைக்கும். இது ஒரு லிட்டர் ரூ.300-க்கு விற்கப்படுகிறது.