வலைதளத்தை ஹேக் செய்து சீட் கேட்ட சென்னை மாணவர்

வலைதளத்தை ஹேக் செய்து சீட் கேட்ட சென்னை மாணவர்

சென்னை பல்கலைக்கழகத்தின் சைபர் ஃபாரீன்சீக்ஸ் துறையில் தனக்கு சீட் வழங்க துறையின் சர்வெர்களை ஹேக் செய்திருக்கிறார். ஹேக் செய்த பின் குறிப்பிட்ட நபர் துறை சார்பில் நடத்தப்பட்ட நுழைவு தேர்வில் கலந்து கொண்டதாக பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் தேர்வில் மாணவர் தேர்ச்சி பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
ஹேக் செய்தது குறித்து மாணவர் அனுப்பிய மின்னஞ்சலில், \'பல்கலைக்கழக வலைத்தளத்தின் பாதுகாப்பு தன்மை குறைவாக இருப்பதை உணர்த்தவே ஹேக் செய்தேன். இதன் மூலம் தீங்கு விளைவிக்கும் திட்டம் ஏதுமில்லை, INFOSEC துறையில் கொண்டிருக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்தவே இவ்வாறு செய்தேன்.\' என குறிப்பிட்டிருந்தார்.
 
சென்னை பல்கலைக்கழகத்தின் சைபர் ஃபாரீன்சீக்ஸ் மற்றும் இன்ஃர்மேஷன் செக்யூரிட்டி (இணைய குற்ற தடவியல் மற்றும் தகவல் பாதுகாப்பு துறை) மாணவர்களுக்கு துறையில் பட்ட மேற்படிப்பு (M.Sc) பாடங்களை வழங்கி வருகிறது. நாடு முழுக்க இந்த துறை சார்ந்த படிப்பு பிரபலமாக இருப்பதோடு, நாட்டின் முன்னமி வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் பணி வாய்ப்புகளை பெற முடியும். 
 
\"\"
 
நடப்பு கல்வியாண்டில் இத்துறையில் பட்ட மேற்படிப்பில் சேர 350 பேர் விண்ணப்பித்த நிலையில், 25 பேர் மட்டுமே தேர்வு செய்யப்படுகின்றனர். கணினிகளை ஹேக் செய்த மாணவர் தான் அனுப்பிய மின்னஞ்சலில் பல்கலைக் கழக வலைத்தளத்தில் பிழையாக இருந்தவற்றை குறிப்பிடும் ஸ்கிரீன்ஷாட்களை பகிர்ந்திருந்தார். இதே போல் பல்கலைக்கழகத்தின் பல்வேறு இதர துறைகளின் வலைத்தளங்களை ஹேக் செய்யும் பிழையையும் கண்டறிந்துல்ளார்.  
 
மேலும் மாணவர் அனுப்பியிருந்த மின்னஞ்சலில் சைபர் ஃபாரீன்சீக் துறையில் பட்ட மேற்படிப்பில் சேர்வது தனது நீண்ட நாள் கனவு என்றும், ஹேக் செய்தது என் திறமையை வெளிப்படுத்தும் நோக்கில் செய்யப்பட்டது. இதனால் நடப்பு கல்வியாண்டில் படிப்பை தொடர அதிகாரிகள் அனுமதிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.