வாய்ஸ் கால் கட்டணங்களை குறைக்க புதிய யுக்தி: டிராய் அதிரடி

வாய்ஸ் கால் கட்டணங்களை குறைக்க புதிய யுக்தி: டிராய் அதிரடி

இந்தியாவில் ஒவ்வொரு டெலிகாம் நிறுவனங்களும் வசூலிக்கும் இண்டர்கனெகட் கட்டணங்களை குறைக்க மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் செலுத்தும் வாய்ஸ் கால் கட்டணங்கள் வெகுவாக குறையும் என டிராய் தெரிவித்துள்ளது. 
 
இந்தியா முழுக்க ஒவ்வொரு வட்டாரங்களில் உள்ள குறிப்பிட்ட நெட்வொர்க்களை பயன்படுத்திக் கொள்ள மற்ற டெலிகாம் நிறுவனங்கள் கட்டணம் செலுத்தி வருகின்றன. இண்டர்கனெக்ட் கட்டணம் என அழைக்கப்படும் இந்த தொகை வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் வாய்ஸ் கால்களுக்கான கட்டணத்தில் வாடிக்கையாளர்களுடம் இருந்து வசூலிக்கப்படுகிறது. 
 
அதன்படி வயர்லெஸ்-இல் இருந்து வயர்லெஸ் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளுக்கான இண்டர்கனெக்ட் கட்டணங்கள் நிமிடத்திற்கு 14 பைசாவில் இருந்து 10 பைசாவாக குறைக்க டிராய் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
 
\"\"
 
பாராளுமன்றத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற விவாதத்தின் போது ஏர்டெல, ஐடியா செல்லுலார் மற்றும் வோடபோன் போன்ற நிறுவனங்கள் தற்போதைய இண்டர்கனெக்ட் இணைப்பை இருமடங்கு அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தன. எனினும் புதுவரவு நிறுவனமான ஜியோ இண்டர்கனெக்ட் கட்டணங்களை பாதியாக குறைக்க வேண்டும் என தெரிவித்தது. 
 
டெலிகாம் நிறுவனங்ள் தங்களது சொந்த லாபத்திற்காக இண்டர்கனெக்ட் கட்டணங்களை உருவாக்கியுள்ளனர். இது போன்ற கட்டணங்களின் மூலம் டெலிகாம் நிறுவனங்கள் பல ஆயிரம் கோடிகளை வருமானமாக ஈட்டு வருகின்றனர். சமீபத்திய தகவல்களின் படி கடந்த ஆண்டு மட்டும் ரூ.10,279 கோடிகளை இண்டர்கனெக்ட் கட்டணங்களாக ஏர்டெல் ஈட்டியுள்ளது தெரியவந்துள்ளது.
 
இதுவரை வெளியாகியுள்ள தகவல்களில் இண்டர்நெட் மூலம் மேற்கொள்ளப்படும் இண்டர்கனெக்ட் கட்டணங்களை நிமிடத்திற்கு மூன்று பைசா வரை குறைக்க டிராய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.