வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டு விடாதீர்கள்!

வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டு விடாதீர்கள்!

வாழைப்பழத்தில் பொட்டாசியம், ஃபைபர், மெக்னீசியம், டிரிப்டோபான், விட்டமின் B6 மற்றும் விட்டமின் B ஆகிய ஊட்டச்சத்துக்களை அதிகமாக நிறைந்துள்ளது.

ஆனால் இவ்வளவு சத்துக்கள் நிறைந்த வாழைப்பழத்தை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், அது பல்வேறு உடல் ரீதியான பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் ஏன் சாப்பிடக் கூடாது?

வாழைப்பழங்களில் பொட்டாசியம், ஃபைபர் மற்றும் மெக்னீசியம் அதிகமாக நிறைந்திருப்பதால் வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லதல்ல.

ஏனெனில் வாழைப்பழத்தில் உள்ள சர்க்கரை சக்தி மற்றும் புத்துணர்வை அளித்தாலும், பின்னர் தூக்கம் மற்றும் களைப்பான உணர்வை ஏற்படுத்துகிறது.

மேலும் வாழைப்பழத்தில் இயற்கையாக உள்ள அமிலங்கள் சிலநேரங்களில் வயிறு தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்திவிடுகிறது.

வாழைப்பழத்தை பற்றி ஆயுர்வேதம் என்ன சொல்கிறது?

ஆயுர்வேதத்தின் படி, வெறும் வயிற்றில் எந்த ஒரு பழத்தையும் சாப்பிடுவது சிறந்தது அல்ல. ஏனெனில் இப்போது கிடைக்கும் பழங்கள் யாவும் இயற்கையான பழங்களாக கிடைப்பதில்லை. பழங்களில் கலந்துள்ள கெமிக்கல்கள் உடலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது.

வாழைப்பழத்தை சாப்பிடலாமா? சாப்பிடக் கூடாதா?

வாழைப்பழம் காலையில் சாப்பிட சிறந்தது உணவு தான். ஆனால் வெறும் வயிற்றில் சாப்பிடுவது சிறந்தது அல்ல. எனவே இதை ஆப்பிள் மற்றும் பிற பழங்களுடன் கலந்து சாப்பிட வேண்டும்.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.