விசேஷ ஏ.ஐ. அம்சங்களுடன் எல்.ஜி தின்க் ஸ்மார்ட்போன் அறிமுகம்

விசேஷ ஏ.ஐ. அம்சங்களுடன் எல்.ஜி தின்க் ஸ்மார்ட்போன் அறிமுகம்

எல்.ஜி. நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மேம்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எல்.ஜி. வி30எஸ் தின்க் என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா துவங்கும் முன் வெளியிடப்பட்டு இருக்கிறது. 
 
விசேஷ செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் தவிர புதிய ஸ்மார்ட்போனில் எல்.ஜி. வி30 கொண்டிருந்த சிறப்பம்சங்களே வழங்கப்பட்டு இருக்கின்றன. எனினும் புதிய ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது.
 

 
விஷன் ஏ.ஐ. சிறப்பம்சங்கள்:
 
ஏ.ஐ கேம் (AI CAM) - இந்த அம்சம் ஃபிரேமில் இருக்கும் பொருளை கண்டறிந்து அதற்கேற்ற ஷூட்டிங் மோட்களை பரிந்துரை செய்யும். இதில் உணவு, செல்லப் பிராணிகள், போர்டிரெயிட், லேண்ட்ஸ்கேப், நகரம், பூ, சூரிய உதயம் (சன்ரைஸ்) மற்றும் சூரிய மறைவு (சன்செட்) என எட்டு மோட்களை கொண்டுள்ளது. 
 
கியூ லென்ஸ் (QLens) - வாடிக்கையாளர்கள் வாங்க பொருட்களை எந்த வலைத்தளத்தில் வாங்க வேண்டும் என்ற தகவல்களை கியூ.ஆர். கோடு மூலம் ஸ்கேன் செய்து பரிந்துரைகளை வழங்கும். இதில் உணவு, உடை மற்றும் பயணிக்க வேண்டிய இடம் மற்றும் இதர தகவல்களை தெரிந்து கொள்ளலாம். 
 
பிரைட் மோட் (Bright Mode) - புகைப்படங்களின் அழகை மேம்படுத்த பல்வேறு வழிமுறைகளை பரிந்துரைக்கிறது.
 
வாய்ஸ் ஏ.ஐ. (Voice AI) - குரல் மூலம் ஸ்மார்ட்போன் செட்டிங்ஸ் மற்றும் செயலிகளை இயக்க முடியும். கூகுள் அசிஸ்டண்ட் சேவையுடன் இணைந்து குறிப்பிட்ட அம்சங்களை இயக்குகிறது. இவை அனைத்தும் மெனு ஆப்ஷன் உதவியின்றி மேற்கொள்ள முடியும். 
 

 
எல்.ஜி. வி30எஸ் தின்க் சிறப்பம்சங்கள்:
 
- 6.0 இன்ச் 2880x1440 பிக்சல் QHD+ OLED டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 
- அட்ரினோ 540 GPU
- 6 ஜிபி ரேம்
- 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ சார்ந்த எல்.ஜி. UX 6.0+
- 16 எம்பி பிரைமரி கேமரா, f/1.6, டூயல்-டோன் எல்.இ.டி. ஃபிளாஷ்
- 13 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/1.9 அப்ரேச்சர்
- 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2 அப்ரேச்சர்
- கைரேகை சென்சார், குரல் மற்றும் முக அங்கீகார வசதி
- வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68), MIL-STD 810G சான்று
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3,300 எம்.ஏ.ஹெச். பேட்டரி, குவிக் சார்ஜ் 3.0, வயர்லெஸ் சார்ஜிங் 
 
எல்.ஜி. வி30எஸ் தின்க் ஸ்மார்ட்போன் பச்சை நிறம் சார்ந்த புதிய மொராக்கன் புளூ, பிளாட்டிம் கிரே நிறங்களில் கிடைக்கிறது. கொரியாவில் மார்ச் மாதமும், இதைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பியாவில் வெளியிடப்பட இருக்கிறது. இதன் விலை குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. 
 
புதிய ஸ்மார்ட்போனினை எல்.ஜி. நிறுவனம் பிப்ரவரி 26-ம் தேதி முதல் மார்ச் 1 வரை ஃபிரா கிரான் அரங்கு எண் 3-இல் காட்சிப்படுத்துகிறது. இத்துடன் தற்சமயம் வழங்கப்பட்டதை விட கூடுதலான செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் ஓ.டி.ஏ. அப்டேட் மூலம் எசதிர்காலத்தில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.