விருப்பம் போல் அணிய ஏற்ற விதவிதமான யுவதியர் பேண்ட்கள்

விருப்பம் போல் அணிய ஏற்ற விதவிதமான யுவதியர் பேண்ட்கள்

இளம்பெண்களுக்கும், நடுத்தர பெண்மணிகளுக்கும் இன்றைய நவீன ஆடைகளை அலாதி விரும்பும் சுடிதார், பைஜாமா போன்றவைகளில் அணியப்படும் பேண்ட் வகைகள் போன்று ஜீன்ஸ் ரக ஜெத்கிங்ஸ், லெக்கிங்ஸ், பாட்டியாலா, பலாஸோ போன்றவை பிரபலமாகி வருகின்றன.

பெண்கள் அணிகின்ற பேண்ட் ரகங்கள் ஒன்று இறுக்கமானதாக கச்சிதமானதாக உள்ளது. மற்றொன்று மிக தளர்வாக, தொளதொளவென்று உள்ளது. எப்படியிருந்தாலும் பெண்கள் தங்களுக்கு ஏற்றவாறு காலத்திற்கும், விழாக்களுக்கும் ஏற்ப அந்த பேண்ட் வகை அணிந்து அதற்கேற்ற மேல் டாப் ஆடைகளை அணிகின்றனர்.

புதிய பாக்கெட் லெக்கிங்ஸ் :

லெக்கிங்ஸ் அனைத்து தரப்பு பெண்களும் அணிகின்ற இறுக்கமான பேண்ட் வகை, இதில் எண்ணற்ற கலர்கள் உள்ளதால் எந்த விதமான மேலாடைக்கும் பொருத்தமான பேண்ட் வகையாக உள்ளது. லெக்கிங்ஸ் பேண்ட்கள் சுலபமாக அணியும் வகையில் அதற்கேற்ற துணிவகைகளால் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் இறுக்கமான அமைப்பு பெண்களை சற்று ஒல்லியான உருவ அமைப்பில் காட்டுவதால் பலதரப்பட்ட மேல் சட்டை வகைக்கும் ஓர் லெக்கிங்ஸ் ஒன்றும் சேர்த்து எடுத்து கொள்கின்றனர்.

லெக்கிங்ஸ் என்பவை பிளைன், பிரிண்டட் என்றவாறு வந்தன. தற்போது அதில் பாக்கெட் வைத்த லெக்கிங்ஸ் வந்துள்ளன. பிளைன் என்பவை நூறுவிதமான வண்ணங்களில் கிடைக்கின்றன. பிரிண்டட் என்பதில் விலங்குகளின் மேல் தோல் அமைப்பு, ஜிக்சார், பெட்டிகள், பூக்கள், மிலிட்டரி போன்றவை வருகின்றன. அது போல் அதிக வண்ண கலப்பின்றி பிளைன் லெக்கிங்ஸ் மாதிரியே மெல்லிய கோடுகள் பிரிண்ட் செய்யப்பட்ட லெங்கிங்ஸ் வருகின்றன.

\"\"

பிரிண்டட் லெக்கிங்ஸ் 93 சதவீத காட்டன் மற்றும் 7 சதவீதம் எலாஸ்டிக் துணி வகை இணைந்து தயாரிக்கப்பட்டதால் கோடை காலத்திலும் அணிய ஏற்றது. அது போல உடலோடு ஒட்டி பிடித்து கொள்ளும் அதிக எலாஸ்டிக் துணிவகை லெக்கிங்ஸ்-ம் கிடைக்கின்றன.

Ads by ZINC
 
 
\"\"
Rising Pune Supergiant   vs  Mumbai Indians
RPS: 128/6 | Target: 129
Mumbai Indians won by 1 run.
\"\"

பாவையர் விரும்பும் பலாஸோ :

பெண்கள் தற்போது பலாஸோ எனும் அதிக தளர்விலான பேண்ட் வகையின் மீது விருப்பம் கொண்டு உள்ளனர். பெரிய பாவாடை அமைப்பை வெட்டி பிரித்து தைத்த பேண்ட் போன்று இருக்கும் இதனை இரவு, பகல் என எப்போதும் அணி எற்றது. குறிப்பாக இக்கோடையின் வெம்மையில் இருந்து பாதுகாக்க காற்றோட்டமான பலாஸோ பேண்ட் உதவுகிறது. 

பலாஸோ பேண்ட்கள் ரேயான், ரிப் மற்றும் காட்டன் துணி வகைகளில் கிடைக்கின்றன. அனைத்து வண்ணங்களிலும் கிடைக்கும் இந்த பேண்ட் வகையை ஒல்லியான தேகம் கொண்ட் பெண்கள் விரும்பி அணிகின்றனர். இதில் தற்போது இளந்தங்க நிறத்தில் வழவழப்பும், பளபளப்பும் கொண்ட பலாஸோவும் வருகின்றன.

\"\"

மடிப்புகள் கொண்ட பாட்டியாலா பேண்ட் :

லெக்கிங்ஸ், பலாஸோ போன்றவை ஒரே நேர் அமைப்பு பேண்ட் வகையாக உள்ளது. ஆனால் பாட்டியாலா என்பது கணுக்கால் பகுதி இறக்கிபிடிக்குமாறும் அங்கிருந்து மேலேழுந்தவாறு விரிவடைந்தவாறு அகலப்படுத்தப்பட்டு இடுப்பு பகுதி வரை அடுக்கடுக்கான மடிப்புகள், சுருக்கங்கள் கொண்டவாறு உள்ளன. இவை பெரும்பாலான காட்டன் துணி வகையில் அழகிய பூக்கள் மற்றும் டிசைன்கள் பிரிண்ட் செய்யப்ட்டவாறு உள்ளது. 

பாட்டியாலா பேண்ட் நிறம் மற்றும் டிசைன் அமைப்பில் துப்பட்டாவும் கிடைக்கின்றன. பெண்கள் தங்கள் மேல் சட்டைக்கு ஏற்ற வண்ணத்தில் பல வண்ணங்களில் பாட்டியாலா கிடைக்கின்றன. நவீன யுவதியர் தேவையறிந்து பாட்டியாலாவிலும் பாக்கெட் வைத்து வருகின்றன. 

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.