விரைவில் இந்தியா வரும் ஸ்கோடா ஃபிளாக்‌ஷிப் எஸ்.யு.வி.

விரைவில் இந்தியா வரும் ஸ்கோடா ஃபிளாக்‌ஷிப் எஸ்.யு.வி.

ஸ்கோடாவின் ஃபிளாக்‌ஷிப் எஸ்.யு.வி. கார் கோடியக் 2017 ஆம் ஆண்டு அப்டேட் செய்யப்பட்டு கோடியக் ஸ்கவுட் என்ற பெயரில் அறிமுகமானது. சர்வதேச சந்தையில் அறிமுகமாகி இரண்டு ஆண்டுகளாகிவிட்ட நிலையில், இந்தியாவில் இந்த கார் அறிமுகமாவது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

 

இந்தியாவில் ஸ்கோடா கோடியக் ஸ்கவுட் கார் 2019 ஆண்டின் நான்காவது காலாண்டில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. ஸ்கோடா கோடியக் ஸ்கவுட் கார் ஸ்டைல் மற்றும் எல்&கே வேரியண்ட்களை விட வித்தியாசமானதாக இருக்கும் என தெரிகிறது. ஸ்கவுட் எஸ்.யு.வி. தரையில் இருந்து 194 எம்.எம். அளவு கிரவுண்ட் கிளியரன்ஸ் வழங்குகிறது. ஸ்டைல் மற்றும் எல்&கே வேரியண்ட்கள் 188 எம்.எம். கிரவுண்ட் கிளியரன்ஸ் வழங்குகின்றன.

 

ஸ்கோடா கோடியக் ஸ்கவுட் கார் ஆறுவித டிரைவிங் மோட்களை கொண்டிருக்கும். கூடுதலாக ஸ்கவுட் காரில் ஆஃப்-ரோடு ஸ்விட்ச் வழங்கப்படுகிறது. இதில் மலையேற்றங்களில் சிறப்பாக செயல்பட வைக்கும் வசதிகள் வழங்கப்படுகின்றன. இதுதவிர புதிய ஸ்கவுட் காரில் 19-இன்ச் அலாய் வீல்கள், கிரில், ரூஃப் ரெயில்கள், ORVM மற்றும் ஜன்னல் ஓரங்களில் சில்வர் நிற டீடெயில் செய்யப்படுகிறது.

 

 

காரின் உள்புறம் முழுமையாக கருப்பு நிறத்தில் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இதன் இருக்கைகளில் ஸ்கவுட் என பேட்ஜிங் செய்யப்படுகிறது. இத்துடன் ஸ்டைல் மாடலில் வழங்கப்பட்டிருக்கும் அதே உபகரணங்கள் ஸ்கவுட் காரிலும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இவற்றுடன் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், எலெக்டிரானிக் ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல், ஏர்பேக், கீ-லெஸ் எண்ட்ரி, ஸ்டார்ட் மற்றும் எக்சிட் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகின்றன. 

 

ஸ்கோடா கோடியக் ஸ்கவுட் காரில் 2.0-லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படலாம் என்றும் இந்த என்ஜின் 7-ஸ்பீடு டைரக்ட் ஷிஃப்ட் கியர்பாக்ஸ் உடன் வரும் என கூறப்படுகிறது. இந்த என்ஜின் 148 பி.ஹெச்.பி. பவர் @ 3500 ஆர்.பி.எம்., 340 என்.எம். டார்க் @ 1750 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்கும் திறன் கொண்டதாகும்.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.