விற்பனையில் சாதனை படைத்த ரெனால்ட்: ஜி.எஸ்.டி-க்கு பின் அசத்தல்

விற்பனையில் சாதனை படைத்த ரெனால்ட்: ஜி.எஸ்.டி-க்கு பின் அசத்தல்

ரெனால்ட் இந்தியா நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்த க்விட் ஹேட்ச்பேக் மாடல் விற்பனையில் அசத்தல் சாதனை படைத்திருக்கிறது. ஜி.எஸ்.டி. வரிமுறைக்கு பிந்தைய விற்பனையில் க்விட் மாடல் விலை ரூ.2.62 (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) முதல் துவங்குகிறது. 
 
இந்த விலையில் ஒருவர் வாங்கும் மாடல், வேரியண்ட் மற்றும் வெவ்வேறு மாநிலத்திற்கும் ரூ.5,200 முதல் ரூ.29,500 வரை சேமிக்க முடியும். அந்தவகையில் ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் இதுவரை 1,75,000 யுனிட் க்விட் ஹேட்ச்பேக்-களை விற்பனை செய்துள்ளது.
 
இந்தியாவின் சிறிய ரக ஹேட்ச்பேக் மாடல்களை பொருத்த வரை க்விட் பல்வேறு அப்கிரேடுகளை சரியான நேரத்தில் வெளியிட்டு வந்துள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு ஏற்றதாகவும் அமைந்ததால் விற்பனை கணிசமான அளவு அதிகரித்துள்ளது என ரெனால்ட் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக தலைவர் தெரிவித்துள்ளார்.
 
ரெனால்ட் க்விட் மாடல் 2014-ம் ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டு அதன் பின் இந்தியாவில் வெளியிடப்பட்டது. இதுவரை இந்தியாவில் மொத்தம் ஐந்து க்விட் மாடல்கள் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றின் மாடல்களுக்கு ஏற்ற செயல்திறன் கொண்ட இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.