வீக்கத்தினை குறைக்கும் உணவுகள்

வீக்கத்தினை குறைக்கும் உணவுகள்

‘ஆர்த்ரைட்டிஸ்’ என்ற வார்த்தையினைச் சொன்னாலே வயது கூடிய முதியோரின் பிரச்சினை என்றே பார்க்கப்படுகிறது. Arthitis என்றால் மூட்டு, வீக்கம் என மூட்டுகளில் வீக்கம் என்ற பொருள்படும். இந்த தலைப்பின் கீழ் குறைந்தது 100 பிரிவுகளை மருத்துவம் வகைபடுத்தி உள்ளது. பிரிவு எந்த வகை யாயினும் ஆர்த்ரைட்டிஸ் தாக்குதல் மனிதனின் வாழ்வு சுதந்திரத்தினை பல வகைகளில் முடக்கி விடுகின்றன. வலி நிவாரண மருந்துகள், சில வகை பயிற்சிகள் இதற்கு உதவும் என்ற வரிசையில் ‘வீக்கம்‘ குறைக்கும் உணவுகள் என சில உவுகளும் இப்போது பரிந்துரைக்கப்படுகின்றது.
 
பொதுவில் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் இந்த மூட்டு வலி தாக்குதலை அதிகமாக சொல்கின்றனர். அவை 7 சதவீதம் அளவில் 18-44 வயதுடையோர் ஏதோ ஒரு பிரிவின் கீழ் மூட்டு வலி, வீக்கம் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். மிக சிறு வயதில் மூட்டு வலிக்கு ஆளாபவர்கள் குறைந்த சதவிகிதம் உள்ளனர்.
மூட்டு வலி என ஏற்படும்போது பாதித்த திசுக்கள் ஒரு குறிப்பிட்ட ரசாயனப் பொருளை வெளிப்படுத்தி பக்கத்திலுள்ள சென்சரி நரம்புகள் மூலமாக தண்டுவடம் மூலமாக ‘நான் பாதிக்கப்பட்டுள்ளேன்’ என்ற செய்தியினை அனுப்பும். 
 
மூளை இதனை உடனே ‘அபாயம். உடனடி கவனி’ என்ற செய்தியினை மோட்டார் நரம்புகளுக்கு அனுப்பும். உடன் வலி கொல்லும். ரசாயனங்களாக Chdarphinr என்ற பொருளினை உடலுக்கு கொடுக்கும். இப்படி நடக்கும் இந்த பாதுகாப்பு செயல்களினை இயற்கை என்று சொன்னாலும், இறை சக்தி என்று சொன்னாலும் வியக்கத்தக்கதே.
 
பொதுவில் வலி எனும் பொழுது ஸ்டீராய்ட் மாத்திரைகள் மற்றும் வலி வீக்கம் குறைக்கும் ஸ்கீராய்ட் அல்லாத மாத்திரைகள் என இரு பிரிவுகளில் சிகிச்சை அளிக்கப்படுகின்றன. ஆனால் ஸ்டீராய்ட் மாத்திரைகளை தொடர்ந்து கொடுக்க முடியாது. அவை ஆபத்தாகி விடும். அனால் ஸ்டீராய்ட் அல்லாத வலி வீக்க நிவாரண மாத்திரைகளையும் தொடர்ந்து பலர் தானே எடுத்தக் கொள்கின்றனர். இது முற்றிலும் தவறு. பக்கவாதம், ரத்த கொதிப்பு, சிறுநீரக பாதிப்பு, கண்ணில் புரை என பல பிரச்சினைகளை உருவாக்கும். மேலும் இருதய பாதிப்புகளை கூட்டும். எனவேதான் ஒவ்வொரு மருந்துவரும் உடற்பயிற்சிக்கு குறிப்பிட்ட பயிற்சிகள் என இயற்கை முறையில் தீர்வு காண அறிவுறுத்துகின்றனர்.
 
இதற்கான இயற்கை வழிமுறைகளை தேடும் முயற்சியில் கிடைத்த பலன்தான் ‘டயட்’ எனப்படும் சில உணவு பழக்க முறைகள். வீக்கம் தான் வலிககு காரணம். பல உணவுகள் இந்த வீக்கத்தினை குறைக்கவும் தடுக்கவும் செய்கின்றன. சில உணவுகள் வீக்கத்தினை குறைத்து தவிர்ப்பது போல் சில உணவுகள் வீக்கத்தினை கூட்டவும் செய்கின்றன. கேபின், ஆல்கஹால், பதப்படுத்தப்பட்ட உணவுகள். இவை வீக்கத்தினை ஏற்படுத்தவும், கூட்டவும் செய்வதாக ஆய்வுகள் கூறுகின்றன. வீக்கத்தினை குறைக்கும் தவிர்க்கும் உணவுகளாக கீழ்க்கண்ட உணவுகள் பரிந்தரைக்கப்படுகின்றன. இதனை உபயோகிப்பதன் மூலம் வீக்கத்தினை தவிர்த்து பல ஆபத்தான நோய்களிலிருந்தும் காத்துக் கொள்ளலாம்.
 
இஞ்சி: இதிலுள்ள ஜிஞ்ரோல் எனும் பொருள் வலி உருவாக்கும் ரசாயனங்கள் மற்றும் ஹார்மோனைத் தவிர்க்கின்றன. இதை பச்சையாகவோ சமைத்தோ உண்பது ஸ்ரோய்ட் அல்லாத வலி நிவாரண மாத்திரைகளை விட சிறந்தது என்கின்றனர். மாத விலக்கு காலத்தில் ஏற்படும் வலியினையும் நீக்குவதாக ஆய்வுகள் கூறுகின்றன. 4-5 துண்டு இஞ்சியினை 5-10 நிமிடம் கொதிக்க வைத்து அந்த நீரினை கூட அருந்தலாம்.
 
 
பூண்டு: வீக்கத்தினை குறைப்பதில் பூண்டு அதிக சக்தி வாய்ந்தது. இதனை மென்று சாப்பிடுவது இதிலுள்ள சக்தியான அலியின்னை வெளியிடுகின்றது. இவையே இதன் கடும் மணம், காரமான ருசி, வீக்கத்தினை குறைக்கும். குணங்களுக்கு காரணமாகின்றது. பூண்டின் ஒரிரு பற்களை மென்று சாப்பிட்டாலே நல்ல பலன் கிடைக்கும் என்று கூறினாலும் இதனை உணவில் சேர்த்தும் உண்ணலாம்.
 
பீட்ரூட்: இதிலுள்ள பீட்டானிஸ்தான் இது தரும் நன்மைகளுக்கு காரணம். இது இருதய நலத்தினையும் நமக்கு கூடுதலாக அளிக்கின்றது. இதனை நீர் வீணகாமல் வேக வைத்து எலுமிச்சை சாறு சேர்த்து சாப்பிடுவது மிகவும் நல்லது. ஜீஸாகவும் அருந்தலாம்.
 
ப்ரோக்கோலி: முழுமையான நோய் எதிர்ப்பு சக்தியும், வீக்கம் குறைக்கும் தன்மையும் கொண்டது. ஆர்த்ரைடிஸ் பாதிப்பு உடையவர்களுக்கு சிறந்த வலி நிவாரணம் அளிக்க வல்லது.
 
Extra virgin olive oil : இது வீக்கத்தினை குறைத்து வலி மாத்திரையினை போல் வலியைக் குறைக்க வல்லது. நீண்ட கால வலியினையும் குறைக்கும் தன்மை கொண்டது. சாலட்களில் சிறிது கலந்து உண்ணலாம்.
 
ஆரஞ்சு: இது அதிக வைட்டமின் ‘சி’ சத்து கொண்டது என்பதனை நாம் அறிவோம். ஆனால் வைட்டமின் ‘ஒ’ எடுத்துக் கொள்வது 20 சதவீதம் ஸிகி-வகை மூட்டு பாதிப்பினை குறைக்க வல்லது என ஆய்வுகள் கூறுகின்றன. எனவே ஆரஞ்சு பழம் உங்கள் உணவு பட்டியலில் இடம் பெற வேண்டும்.
 
க்ரீன் டீ: இதிலள்ள பாலிபினால் சத்து 100 மடங்கு வைட்டமின் சி ஈ சத்தினை விட அதிகம் கொண்டது. ஆகவேத்தான் சமீப காலமாக கரீன் டீ அதிகம் அனைவருக்குமே பரிந்துரைக்கப்படுகின்றது. க்ரீன் டீ வீக்கத்தினை வெகுவாய் குறைத்து பாதிப்பினை தவிக்கின்றது.
 
கேரட்: பீட்டாகரோடின் கொண்ட காரட், குர்குமின் கொண்ட மஞ்சள் இவை நீண்ட கால மூட்டு வீக்கத்திற்கு நிவாரணம் அளிக்கின்றன என்று ஆய்வுகள் கூறுகின்றன. இவற்றினை உணவில் சேர்த்து வந்தாலே நல்ல பலனை பெற முடியும்.
 
இதுபோன்று அன்னாசி, வாழைப் பழம், சர்க்கரை வள்ளி, வால்நட், ஆப்பிள், தேங்காய் எண்ணெய், பச்சை கீரை வகைகள், தக்காளி இவை மூட்டுக்களின் வீக்கத்திற்கு மிக நல்ல தேர்வினை அளிப்பதால் மேற்கூறியவற்றினை தவறாமல் உணவில் சேர்த்து வருவதும், முறையான உரிய பயிற்சிகள் செய்வதும் சிறந்த பலனை அளிக்கும் என்பதனை அறிவோமாக.
 
எலும்பு தேய்மானம்: எலும்பு தேய்மானம் அடைந்துள்ளது என்பதனை ஒருவர் அறியும் முன்பே ஒருவருககு எலும்பின் தேய்மானம் சற்று கூடுதலாகவே பாதித்து விடுகின்றது. பொதுவில் எதிர்பாராத எலும்பு முறிவு ஏற்படும்போது பாதிக்கப்பட்டவர் மருந்துவர் மூலம் எலும்பு தேய்மானத்தினை அரிகின்றார். இவை 50 வயதினைத் தாண்டியவர்களிடம் அதிகம் காணப்படுகிறது. ஆண்களை விட பெண்களுக்கு மிகக் கூடுதலாக எலும்பு தேய்மான பாதிப்பு ஏற்படுகின்றது.
 
நம் உடலில் உறுதியான உறுப்பு எலும்புகள்தான். உடலை உருவத் தோற்றத்தோடு வைக்கின்றது. உடலின் எடையையும் தாங்குகின்றது. எலும்பு தேய்மானம் அடைந்து கரைந்து வரும் பொழுது சாதாரண அன்றாட வேலையிலே உடைந்து விடுகின்றது. தும்மலினால் எலும்பு உடைந்தவர்கள் கூட உண்டு. எலும்பின் தடிமம் குறைந்து உறுதியில்லாத தளர்ந்த தேன்கூடு போல் ஆகி விடுகின்றது.
 
 
50 வயதினை கடக்கும் 50% பெண்களும், 25% ஆண்களும் எலும்பு தேய்ந்து கரைவதன் காரணமாக எலும்பு முறிவுக்கு ஆளாகின்றனர் என்று ஆய்வு விவரங்கள் கூறுகின்றன. ஆரம்ப காலத்தில் எந்த அறிகுறியும் இல்லாது இருக்கும் இந்த பாதிப்பின் அறிகுறிகள் பின்னர் தெரிய ஆரம்பிக்கும்.
 
• உயரம் குறைந்து தெரியும்.
• நிற்பது கூன் போட்டு இருக்கும்.
• முதுகுவலி-தண்டு வட எலும்பு பாதிப்பு இருக்கலாம்.
• ஏதாவது எலும்பு முறிவு பாதிப்பு ஆகிய அறிகுறிகள் இருக்கும்.
 
பரம்பரை, சிறிய உருவம் ஆசிய நாடுகளைச் சார்ந்தவர்களுக்கு இந்த பாதிப்பு அதிகமாக இருக்கின்றது. தைராய்டு பிரச்சினை, அட்ரினல் சுரப்பி பிரச்சினை இவைகளும் கூட எலும்பு தேய்மான பிரச்சினைக்கு காரணமாகின்றன. மேலும்
 
• அதிக ஸ்டீராய் மருந்து எடுத்துக் கொள்ளுதல்
• புற்றுநோய், வலிப்பு மற்றும் அதிக ஆசிட் எதிர்க்கும் பிரச்சினை
• போதிய சக்தியின்மை
• மக்னீசியம் குறைபாடு
• புகையிலை பழக்கம்
• ருமடாய்ட் ஆர்த்ரைட்டிஸ் பாதிப்பு உடையவர்கள்
• அதிக மது பழக்கம்
• உழைப்பின்றி இருப்பவர்கள் 
 
ஆகியோருக்க எலும்பு தேய்மான பாதிப்பு கூடுதலாக இருப்பதாக கூறப்படுகின்றது. இதற்கு ஆரம்ப நிலையிலேயே தகுந்த சிகிச்சையினை மருத்துவர் மூலமாக எடுத்துக் கொண்டால் எலும்பினை காத்துக் கொள்ள முடியும்.
 
• அசைவம் உண்ணும் பழக்கம் உடையவர்கள் மீன் உணவினை வாரம் மூன்று முறையாவது எடுத்துக் கொள்ளலாம்.
• ஒமேகா 3 நிறைந்தது. கால்சியம் உடலில் நன்றாக உறிஞ்ச உதவுகின்றது. எலும்பின் அடர்த்தி கூடுகின்றது.
• காலை இளம் வெயில் உங்கள் உடலில் படுமாறு சிறிது நேரம் இருங்கள். வைட்டமின் டி சத்து இல்லாமல் எலும்பினால் கால்சியத்தினை தன்னுள் உறிஞ்சு கொள்ள முடியாது. இந்த வைட்டமின் டி சூரிய ஒளி உடலில்படும் பொழுது எளிதாய் கிடைத்து விடுகின்றது.
• தகுந்த பயிற்சியாளரின் அறிவுரையோடு எடை தூக்கும் சில பயிற்சிகளை செய்யுங்கள்.
• புகை பிடிப்பதனை நிறுத்தி விடுங்கள்.
 
• காபி அடிக்கடி குடிக்காதீர்கள்.
• மதுவினை நிறுத்தி விடுவது நல்லது.
• வைட்டமின் கே உங்களுக்குத் தேவையா என்பதனை மருத்துவ ஆலோசனை மூலம் அறியுங்கள்.
• உங்கள் ஹார்மோன்கள் சீராய் இருந்தால் எலும்பும் நன்றாக இருக்கும்.
• யோகா பயிற்சி எலும்பின் அடர்த்தியினை காக்கும்.
• அதிக ஸ்டிரெஸ் இல்லாது இருங்கள்.
• எட்டு மணி நேரம் தூங்குங்கள்.
உங்கள் எலும்பு பாதுகாப்பாய் இருக்கும்.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.