வீட்டை சுத்தம் செய்ய எலுமிச்சை போதுமே!

வீட்டை சுத்தம் செய்ய எலுமிச்சை போதுமே!

பொதுவாகவே வீட்டை சுத்தம் செய்வதற்கு அமிலத்தன்மை கொண்ட வேதிப்பொருட்களை பயன்படுத்துவோம்.

இதனால் சுவாசம் மற்றும் சருமப் பிரச்னைகளை சந்திக்க நேரிடலாம்.

எனவே இவற்றிற்கு பதிலாக எலுமிச்சை மற்றும் வினிகரை பயன்படுத்தியே சிறப்பான பலனை பெறலாம்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீரையும், சோடா உப்பையும் கலந்து வைத்துக் கொள்ளுங்கள், இதில் ஒரு எலுமிச்சையை பிழிந்து கொள்ள வேண்டும், இதனை கொண்டு ஜன்னலை துடைத்தால் பளிச்சென மின்னும்.

ஜிங்கை சுத்தம் செய்ய, முதலில் எலுமிச்சை பழத்தை நறுக்கி ஜிங்கை சுற்றி பிழிந்து கொள்ள வேண்டும், பின்னர் சிறிதளவு கல் உப்பை தூவி விட்டு பிரஷ் கொண்டு தேய்த்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

எலுமிச்சை பழத்தை தரையில் சில துளிகள் பிழிந்து அதனை ஈரத்துணி கொண்டு துடையுங்கள். பத்து நிமிடம் கழித்து வினிகர், உப்பு மற்றும் தண்ணீர் கலந்த கலவையை கொண்டு மாப் செய்யுங்கள், வாரம் ஒருமுறை இதனை செய்து வாருங்கள்.

இதேபோன்று பத்து துளிகள் எலுமிச்சை எண்ணெய், 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறுடன் சில துளிகள் ஆலிவ் எண்ணெய் கலந்து கொள்ள வேண்டும், பின்னர் காட்டன் துணியை வைத்து தரையை துடைத்தாலும் கிருமிகள் நீங்கி சுத்தமாக இருக்கும்.

டாய்லெட் சீட்டின் நிறம் மங்கி இருந்தால், அதன் மீது எலுமிச்சை சாறை பிழிய வேண்டும், பின்னர் சமையல் சோடாவை தூவி பிரஷ் கொண்டு நன்கு தேய்த்து வரவும், வாரத்திற்கு இருமுறை தொடர்ந்து இதனை செய்து வந்தால் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி விடும்.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.