வெறும் வயிற்றில் கண்டிப்பாக சாப்பிட கூடாத உணவுகள்

வெறும் வயிற்றில் கண்டிப்பாக சாப்பிட கூடாத உணவுகள்

காலை உணவை கட்டாயம் சாப்பிடுவது அன்றைய பொழுதை புத்துணர்ச்சியுடன் தொடங்குவதற்கு வழிவகுக்கும். அதேவேளையில் உணவை உட்கொள்வதற்கு முன்பாக வெறும் வயிற்றில் ஒருசில உணவு பதார்த்தங்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் தேவையற்ற உடல் உபாதைகள் ஏற்படும். வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடிய மற்றும் சாப்பிடக்கூடாத உணவு வகைகள் குறித்து பார்ப்போம்.

* காலையில் எழுந்ததும் டீ, காபி பருகும் பழக்கத்தை பெரும்பாலானவர்கள் வாடிக்கையாக கொண்டிருக்கிறார்கள். ஆனால் வெறும் வயிற்றில் டீயோ, காபியோ பருகுவது தவறான பழக்கம். அதில் உள்ள ‘காபின்’ வயிற்று உபாதைகள் தோன்ற வழிவகுத்துவிடும். குமட்டல், இரைப்பை அழற்சி போன்ற அசவுகரியங்களை உண்டாக்கும். அதனால் காபி குடிப்பதற்கு முன்பாக காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் பருகுவது நல்லது.

* வெறும் வயிற்றில் சாக்லேட், சுவீட்கள் போன்ற இனிப்பு பலகாரங்களை சாப்பிடக்கூடாது. அவை இன்சுலின் அளவை அதிகப்படுத்திவிடும்.

* வெறும் வயிற்றில் தயிர் சாப்பிடக்கூடாது. அதில் இருக்கும் நல்ல பாக்டீரியா நொதித்து வயிற்று உப்புசத்தை ஏற்படுத்திவிடும்.

* பொதுவாகவே வெறும் வயிற்றில் மாத்திரை சாப்பிடக்கூடாது. அது வயிற்றில் உள்ள அமிலத்துடன் கரைந்து வயிற்று படலத்தை அரிக்க தொடங்கிவிடும். தேவையற்ற உடல் உபாதைகள் உண்டாக காரணமாகிவிடும். டாக்டர் பரிந்துரைத்தால் வெறும் வயிற்றில் மாத்திரை சாப்பிடலாம்.

* வாழைப்பழத்தில் மக்னீசியம் அதிகம் இருக்கிறது. அதனை காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால் அதிக அளவில் மக்னீசியம் ரத்தத்தில் கலந்துவிடும். அது சிலரது உடலுக்கு ஒத்துக்கொள்ளாது.

* எப்போதுமே தக்காளியை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. அதில் இருக்கும் டான்னிக் அமிலம் இரைப்பையில் சுரக்கும் அமிலத்துடன் இணைந்து பாதிப்பை ஏற்படுத்திவிடும். குறிப்பாக அல்சர் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

* காரமான உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. ஏனெனில் வயிற்றில் உள்ள அமிலத்துடன் காரம் சேர்ந்து கடுமையான எரிச்சலை ஏற்படுத்தி விடும். செரிமான கோளாறுகளும் உண்டாகக்கூடும்.

\"\"

* குளிர்பானங்களையும் வெறும் வயிற்றில் பருகக்கூடாது. அது வயிற்று பகுதிக்கு செல்லும் ரத்தத்தின் அளவை குறைத்து விடும். அதன் காரணமாக உணவு செரிமானம் ஆவதற்கு தாமதமாகும். குளிர்பானங்களை ஒருபோதும் பருகாமல் இருப்பது நல்லது.

* காலையில் ஓட்ஸ் உணவுவகைகளை சாப்பிடுவது நல்லது. அது உடலில் உள்ள கொழுப்பின் அளவை குறைப்பதற்கு உதவும்.

* காலை உணவுடன் முட்டை சாப்பிட்டு வருவது நல்லது. அது கலோரியின் அளவை குறைப்பதற்கு துணைபுரியும்.

* காலையில் வெறும் வயிற்றில் தர்ப்பூசணி சாப்பிடுவது நல்லது. அது உடல் ஆரோக்கியத்தை மேம் படுத்தும். கண்கள் மற்றும் இதயத்திற்கும் நல்லது.

* காலையில் தானியங்களில் தயாரித்த பிரெட் சாப்பிடுவது நல்லது. அதில் இருக்கும் ஊட்ட சத்துக்கள் உடல் ஆரோக்கியத்துக்கு நலம் சேர்க்கும்.

* உடல் நலனுக்கு நன்மை சேர்ப்பதில் தேனுக்கு முக்கிய பங்கு உண்டு. அதனை தினமும் காலையில் உணவு பதார்த்தங்களுடன் சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு சக்தியை கொடுக்கும். மூளை சுறுசுறுப்புடன் செயல்படவும் துணை புரியும். புத்துணர்ச்சி தரும் ஹார்மோன்களின் சுரப்பையும் அதிகரிக்க செய்யும்.

* பாதாம் பருப்பை தினமும் 6 வீதம் வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது. அவை செரிமானத்தை எளிமைப்படுத்தும். அல்சர், வயிற்று கோளாறு போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும். முதல்நாள் இரவில் ஊற வைத்து மறுநாள் சாப்பிட வேண்டும்.

* பப்பாளி பழத்தில் தாதுக்கள், வைட்டமின்கள் இ, வைட்டமின் சி போன்றவை இருக்கின்றன. அதனை காலையில் சாப்பிடுவது செரிமானத்துக்கு துணை புரியும். 

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.