
வேலைவாய்ப்புகளை அள்ளித்தரும் Textile Engineering
பள்ளி முடித்தவுடன் அடுத்தாக யோசிப்பது கல்லூரியில் எந்த பாடப்பிரிவை தேர்ந்தெடுப்பது என்பதைத் தான்.
தான் தேர்ந்தெடுக்கும் கல்லூரிப் படிப்புதான் வாழ்க்கையின் அடுத்தப் படிக்கு செல்வதற்கான திறவுக்கோல்.
தேர்ந்தெடுக்கும் கல்லூரிப் பிரிவானது அதிக வேலை வாய்ப்பினை உடையதாக இருந்தால் அடுத்த நிலையினை எட்டி விடுவது மிக எளிது.
டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் (Textile Engineering)
எக்காலத்திலும் மவுசுக் குறையாதத் துறை என்பது டெக்ஸ்டைல் துறையே.
அதிலும் புதுப்புது யுக்திகளைப் புகுத்துவதன் மூலம் அதை மேலும் அதிகரிக்கலாம்.
நூலிழைகளை தயாரிக்கப் பயன்படுகின்ற பாலிமர்களின் இயற்பியல், வேதியியல் பண்புகளை ஆராய்ந்து அதன் மூலம் ஆடை தயாரிக்கும் தொழில்நுட்பத்தினை அறியலாம்.
ஆண்டுதோறும் அதிக வேலைவாய்ப்பினை தரும் இந்தத் துறையில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தொழில்நுட்பமும் மாறுகிறது. இதனால் இத்துறை கடுமையான முன்னேற்றத்தினை அடைந்துள்ளது.
ஸ்பின்னிங், வீவிங், கார்மென்ட் உற்பத்தி, டெக்ஸ்டைல் பாகங்கள் உற்பத்தி, விற்பனை மற்றும் சேவை, தரத்தை நிர்ணயித்தல் என டெக்ஸ்டைல் டெக்னாலஜி பல பிரிவுகளை கொண்டிருக்கிறது.
இன்பர்மேசன் சிஸ்டம்ஸ் டிசைன்ஸ், வேதியியல் வினைகள், எந்திர வடிவமைப்பு, டெக்ஸ்டைல் புராடக்ட் இன்ஜினியரிங் உள்ளிட்ட பிரிவுகள் இத்துறையில் கீழ் கற்றுத்தரப்படுகின்றன.
இத்துறையில் பட்டப்படிப்பினை முடித்தவர்களுக்கு உள்நாடு மட்டுமல்லாது வெளிநாட்டிலும் வேலை வாய்ப்புகள் அதிகம்.