வோடஃபோன் - ஐடியா செல்போன் நிறுவனங்கள் ஒன்றிணைகின்றன

வோடஃபோன் - ஐடியா செல்போன் நிறுவனங்கள் ஒன்றிணைகின்றன

இங்கிலாந்தைச் சேர்ந்த வோடஃபோன் நிறுவனமும், ஆதித்யா பிர்லா குழுமத்தைச் சேர்ந்த ஐடியா செல்லுலர் நெட்வொர்க்கும் இணைந்து செயல்பட ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

இரண்டு நிறுவனங்களும் இணைந்து உருவாக்கும் நிறுவனத்தின் 45.1 சதவீத பங்குகளை வோடஃபோன் வைத்திருக்கும். ஐடியா பிரமோட்டர்ஸ் 26 சதவீத பங்குகளை தன் வசம் வைத்திருக்கும் என்றும் ஒப்பந்தத்தில் முடிவாகியுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், இவ்விரு நிறுவனங்கள் அடுத்த 24 மாதங்களில் ஒன்றிணையும் பணி நிறைவடையும்.

நெட்வொர்க் இயக்குநர்களின் கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியானது. ஐடியா - வோடஃபோன் செல்போன் நெட்வொர்க்குகள் இணைந்தால், அதுதான் இந்தியாவின் மிகப்பெரிய செல்போன் நிறுவனமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.