ஸ்கோடா ஆக்டேவியா RS இந்தியாவில் வெளியிடப்பட்டது: விலை மற்றும் சிறப்பம்சங்கள்

ஸ்கோடா ஆக்டேவியா RS இந்தியாவில் வெளியிடப்பட்டது: விலை மற்றும் சிறப்பம்சங்கள்

ஸ்கோடா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆக்டேவியா RS மாடல் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் ஸ்கோடா ஆக்டேவியா RS விலை ரூ.24.62 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஸ்டான்டர்டு ஆக்டேவியா மாடலின் விலை இந்தியாவில் ரூ.15.46 லட்சத்தில் துவங்கி ரூ.22.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை விற்பனை செய்யப்படுகிறது.
 
புதிய ஸ்கோடா RS முன்பதிவு ஏற்கனவே துவங்கிய நிலையில், வாடிக்கையாளர்கள் ரூ.50,000 செலுத்தி முன்பதிவு செய்ய முடியும். இதுவரை ஸ்கோடா RS முன்பதிவில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்தியா முழுக்க பெரும்பாலான ஸ்கோடா விற்பனை மையங்களில் ஸ்கோடா RS இறக்குமதி செய்யப்பட்டுள்ள நிலையில், இவற்றின் விநியோகம் இம்மாத இறுதியில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
ஸ்கோடா RS மாடல் 2.0 TSI டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின், 6-ஸ்பீடு DSG ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது, சர்வதேச சந்தையில் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டது. 2.0 லிட்டர் மோட்டார் 230 bhp, 350 Nm டார்கியூ செயல்திறன் கொண்டுள்ளது. ஸ்கோடா ஸ்டான்டர்டு பெட்ரோல் மாடல் 177 bhp, டீசல் மோட்டார் 138 bhp செயல்திறன் கொண்டுள்ளது. புதிய ஸ்கோடா RS 0-100 கிலோமீட்டர் வேகத்தை 6.8 நொடிகளில் செல்லும் என்பதோடு மணிக்கு 250 கிலோமீட்டர் வரை வேகத்தில் செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
\"\"
 
இன்ஜின் மட்டுமின்றி இதன் முன்பக்கம் பிளாக் ரேடியேட்டர் கிரிள், vRS பேட்ஜிங் மற்றும் க்ரோம் சரவுண்டு செய்யப்பட்டுள்ளது. இத்துடன் குவாட்-எல்இடி ஹெட்லேம்ப் செட்டப், எல்இடி ஃபாக்லேம்ப் மற்றும் 19-இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளது. இன்டீரியர் அம்சங்களை பொருத்த வரை ஸ்கோடா ஆக்டேவியா RS மாடலில் பல்வேறு வசதிகளை வழங்கும் ஸ்டீரிங் வீல், பேடிள் ஷிஃப்டர்கள், பிளாக் லெதர் / ஃபேப்ரிக் காம்பினேஷன் சீட் ஆம்பியன்ட் லைட்டிங் செய்யப்பட்டுள்ளது. 
 
இத்துடன் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, மிரர்லின்க் மற்றும் டிரைவர் அசிஸ்ட் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மேம்படுத்தப்பட்ட சஸ்பென்ஷன் செட்டப், டைனமிக் சேசிஸ் கண்ட்ரோல் வங்கப்பட்டுள்ளது.
 
முன்னதாக ஸ்கோடா நிறுவனத்தின் ரேபிட் மான்ட் கார்லோ எடிஷன் வெளியிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக மற்றொரு புதிய மாடல் அறிமுகம் செய்து வாடிக்கையாளர்களை கவர முயற்சிக்கிறது. புதிய மாடல்களைத் தொடர்ந்து ஸ்கோடா கோடியாக் எஸ்.யு.வி. வெளியீடு இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.