ஸ்கோடா கோடியக் இந்தியாவில் வெளியானது

ஸ்கோடா கோடியக் இந்தியாவில் வெளியானது

ஸ்கோடா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட எஸ்.யு.வி. கோடியக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இன்று முதல் முன்பதிவு செய்யப்படும் கோடியக் விநியோகம் நவம்பர் மாத முதல் வாரத்தில் துவங்குகிறது. லாவா புளூ, குவார்ட்ஸ் கிரே, மேஜிக் பிளாக் மற்றும் மூன் வைட் நிறங்களில் கிடைக்கும் கோடியக் விலை இந்தியாவில் ரூ.34,49,501 லட்சம் முதல் துவங்குகிறது. இத்துடன் கூடுதலாக ரூ.59,999 செலுத்தும் போது நான்கு வருடங்களுக்கு வாரண்டி, ரோட்சைட் அசிஸ்டன்ஸ் மற்றும் பராமரிப்பு உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. 

கடந்த ஆண்டு பெர்லின் நகரில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட கோடியக் ஃபோக்ஸ்வேகனின் MQB சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. முன்பக்கம் புதிய வடிவமைப்பு, பெரிய ரேடியேட்டர் கிரில் மற்றும் டபுள் ஹெட்லைட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.  இத்துடன் முன்பக்கம் மற்றும் பின்புறமும் எல்இடி மின்விளக்குகள் வழங்கப்பட்டுள்ளது.

புதிய ஸ்கோடா கோடியக் 2-லிட்டர் 4 சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் அதாவது 177 bhp, 320 NM டார்கியூ, 2-லிட்டர் 4 சிலிண்டர் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் 147 bhp, 340 NM டார்கியூ அல்லது 187 bhp, 400NM டார்கியூ செயல்திறன் கொண்டுள்லது. இந்த இன்ஜின்களில் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 7-ஸ்பீடு DSG யுனிட் கொண்டுள்ளது.  

\"\"

இத்துடன் பானாரோமிக் சன்ரூஃப், காரின் நிறத்திற்கு ஏற்ற நிறத்திலான ரூஃப் டெயில்கள், பிளாக்கன்-அவுட் முன்பக்கம் மற்றும் பம்ப்பர் வழங்கப்பட்டுள்ளது. பக்கவாட்டில் எஸ்.யு.வி. கூர்மையான கோடுகளையும், பார்க்க ஸ்போர்ட் தோற்றத்தை வெளிப்படுத்துகிறது. ஏழு பேர் அமரக்கூடிய முதல் ஸ்கோடா வாகனமாக இருக்கும் கோடியக் கேபினில் ஸ்கோடா கனெக்ட் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, நேவிகேஷன் மற்றும் ப்ளூடூத் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. 

ஸ்கோடா கோடியக் மாடலில் பார்க்கிங் அசிஸ்ட் சிஸ்டம், 24 டிரைவர்ஸ் அசிஸ்ட் சிஸ்டம், பின்புற டிராஃபிக் அலெர்ட் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 270 லிட்டர் பூட் ஸ்பேஸ் வழங்கப்பட்டுள்ளது, எனினும் இரண்டாவது மற்றும் மூன்றாவது இருக்கைகளை மாற்றியமைத்து 2005 லிட்டர் வரை பூட் ஸ்பேஸ் நீட்டிக்க முடியும்.

\"\"

மற்ற அம்சங்களை பொருத்த வரை ஸ்கோடா கோடியக்கில் எலெக்ட்ரிக் டெயில்கேட், டூயல்-சோன் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், இன்ஜன் ஸ்டார்ட் / ஸ்டாப் அம்சம், எலெக்ட்ரிக் டிரைவர் சீட் மற்றும் ஸ்டீரிங் மவுண்ட்டெட் ஆடியோ மற்றும் குரூஸ் கண்ட்ரோல் வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. இதன் உயர் ரக மாடலில் ஆறு ஏர்பேக்ஸ் ABS மற்றும் EDB உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் ஸ்கோடா கோடியக் எஸ்.யு.வி. அந்நிறுவனத்தின் ஔரங்காபாத் ஆலையில் தயாரிக்கப்படுகிறது. புதிய ஸ்கோடா கோடியக் இந்திய சந்தையில் ஃபோர்டு என்டேவர், டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் இசுசு MU-X மாடல்களிடம் இருந்து கடுமையான போட்டியை எதிர்கொள்ளும். 

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.