ஸ்மார்ட்போனில் சார்ஜிங் கோளாறு: சரி செய்ய சில டிப்ஸ்

ஸ்மார்ட்போனில் சார்ஜிங் கோளாறு: சரி செய்ய சில டிப்ஸ்

ஸ்மார்ட்போன்களில் சார்ஜிங் செய்யும் போது ஏதேனும் பிரச்சனை ஏற்படுவது மிகவும் சாதாரண ஒன்று ஆகும். ஆனால் சிலர் சார்ஜிங் கோளாறுகளுக்கே ஸ்மார்ட்போனினை சர்வீஸ் சென்டர்களுக்கு எடுத்து செல்வர். 
 
பொதுவாக ஸ்மார்ட்போன்களில் சார்ஜிங் கோளாறுகள் ஏற்படும் போது நீங்களாகவே இதனை சரி செய்வது எப்படி என்பதை இங்கு பார்ப்போம்...
 
பேட்டரி போர்ட் சரி பார்க்க வேண்டும்:
 
முதற்கட்டமாக ஸ்மார்ட்போனில் பேட்டரியை கழற்ற முடியும் எனில், அதனினை கழற்றி சுத்தம் செய்து மீண்டும் பொருத்த வேண்டும். சில சமயங்களில் பேட்டரி மற்றும் யுஎஸ்பி போர்ட் சரியாக இணையாத போதும் சார்ஜிங் ஏற்படுவதில் கோளாறு ஏற்படலாம். 
 
சார்ஜிங் போர்ட்களை சுத்தமாக வைக்க வேண்டும்:
 
உங்களது ஸ்மார்ட்போனினை எப்போதும் பாக்கெட்டில் வைத்திருப்பீர்கள் எனில், உங்களது பாக்கெட்டில் இருக்கும் பஞ்சு சார்ஜிங் போர்டினுள் அடைத்து இருக்கலாம். இதனால் அடிக்கடி சார்ஜிங் போர்ட்களை சுத்தம் செய்வது நல்ல பலன்களை தரும். 
 
சார்ஜிங் கேபிளை சரிபார்க்க வேண்டும்:
 
சில சமயங்களில் உங்களின் சார்ஜிங் கேபிள் பாழாகியிருக்கலாம், இதனால் உங்களது சார்ஜரில் வேறு கேபிளை பயன்படுத்தலாம். இவ்வாறு செய்யும் போது கேபிளில் பிரச்சனை இருப்பதை கண்டறிய முடியும். கேபிள் தான் பிரச்சனை என்றால் அதனை மாற்றிக் கொள்ளலாம். சார்ஜர் கேபிள் போன்றே சார்ஜிங் அடாப்டரையும் சோதனை செய்ய வேண்டும். இவ்வாறு செய்து சார்ஜிங் அடாப்டரை மட்டும் மாற்றி கொள்ளலாம். 
 
பிராண்டட் பேட்டரியை பயன்படுத்த வேண்டும்:
 
எத்தகைய ஸ்மார்ட்போன் பேட்டரி என்றாலும் சில ஆண்டுகளில் அவை பாழாகிவிடும். இதனால் பேட்டரி பாழாகியிருப்பதை சரி பார்க்க வேண்டும். பிரச்சனை பேட்டரி தான் என்றால் அதனை மாற்றுவதோடு, ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் ஒரிஜினல் பிராண்டு பேட்டரியை மாற்றுவது அவசியம் ஆகும். 
 
 
சரியான சார்ஜரை பயன்படுத்த வேண்டும்:
 
 

 

ஸ்மார்ட்போனினை சீரான வேகத்தில் சார்ஜ் செய்ய சுவற்றில் இருக்கும் சார்ஜரை பயன்படுத்த வேண்டும். கணினி அல்லது யுஎஸ்பி கொண்டு சார்ஜ் செய்யும் போது சார்ஜிங் வேகம் குறைவாகவே இருக்கும்.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.