ஸ்மார்ட்போன் மூலம் செலவே இல்லாமல் 3டி ஹோலோகிராம்..! ’செம’ அனுபவம்!

ஸ்மார்ட்போன் மூலம் செலவே இல்லாமல் 3டி ஹோலோகிராம்..! ’செம’ அனுபவம்!

திரையில் ஒரு காட்சியை பார்த்து உணரும் அனுபவம் என்பது அலாதியானது. சாதாரண திரையில் இருந்து விர்ச்சுவல் ரியாலிட்டி, ஆக்மென்ட் ரியாலிட்டி என் காலத்திற்கு தகுந்தவாறு அந்த அனுபவம் மாறிக்கொண்டே இருக்கிறது.திரையில் தெரிவது பொய்யான தோற்றம் என நமக்குத் தெரிந்தாலும் அதை உண்மை என மூளையை நம்ப வைப்பதற்காக புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகமாகிக் கொண்டே இருக்கின்றன. அதில் ஒன்றுதான் ஹோலோகிராம் தொழில்நுட்பம்.

ஹோலோகிராம் (Hologram) என்பது இல்லாத ஒரு பிம்பத்தை திரையின் மூலமாக உருவாக்குவது.  ரஜினி நடிக்கும் 2.0 திரைப்படத்தின் அறிமுக விழாவில் சிட்டியை பேச வைத்தார்களே. அது ஹோலோகிராம் தொழில்நுட்பத்தினால் தான் சாத்தியமானது. ஒருவரை உங்கள் முன்னால் இருப்பது போன்று மாய  தோற்றத்தை இதன் மூலமாக உருவாக்கலாம்.

இந்த ஹோலோகிராம் தொழில்நுட்பத்தை குறைவான விலையில் ($560 டாலர்கள்) செலவில் உருவாக்கியுள்ளனர் ஹோலஸ் நிறுவனத்தினர். இந்தக் கருவியின் மூலமாக ஹோலோகிராம் அனுபவத்தை துல்லியமாக பெற முடிகிறது. இந்தத் தொழில்நுட்பம் மாணவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். 3D முறையில் காட்சிகள் தெரிவதால் அவர்களால் பாடங்களை எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

ஆக்மென்ட் ரியாலிட்டி, விர்ச்சுவல் ரியாலிட்டி போல இதைக் காண்பதற்கென தனியாக உபகரணங்கள் தேவைப்படாது என்பது கூடுதல் சிறப்பு. எதிர்காலத்தில் ஹோலோகிராம் தொழில்நுட்பம் கோலோச்சும் என்பதில் சந்தேகமில்லை. இந்த தொழில்நுட்பத்தால் நாம் திரையில் காட்சிகளை பார்க்கும் அனுபவம் மேம்படலாம்.ஸ்மார்ட்போன்களில் இருக்கும் வாய்ஸ் அசிஸ்டெண்ட்களுக்கு கூட கற்பனையான உருவத்தை உருவாக்கி அதனுடன் உரையாட முடியும்.

இப்பொழுதே இந்த ஹோலோகிராமை பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறதா?அதுவும் முடியும்.  நமது ஸ்மார்ட்போன்களிலேயே செலவே இல்லாமல் ஹோலோகிராம் தொழில்நுட்பத்தை செயல்படுத்தி பார்க்கலாம்

தேவையான பொருட்கள்:

1. சிடி கவர்
2.காகிதம்
3.கத்தரிக்கோல்
4.செல்லோடேப்

\"ஹோலோகிராம்

மேலே உள்ள படத்தை போல அடிப்பகுதி 

  1. 1cm பக்கவாட்டு பகுதி 3.5cm மற்றும் மேல்பகுதி 6cm அளவில் ஒரு முக்கோண வடிவிலான வடிவத்தை வரைந்து கொள்ளவும் பின்பு அந்த காகிதத்தை தனியாக வெட்டியெடுத்து அதை அடிப்படையாக வைத்து சிடி கவரை காகிதத்தின் வடிவத்தைபோன்றே நான்கு தனித்தனி பகுதிகளாக வெட்டவும்
  2. பின்பு அந்த நான்கையும் செல்லோடேப் மூலமாக இணைத்துவிட்டால் மினி ஹாலோகிராபி கருவி தயார் இதனை நமது ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தலாம்.
  3. ஹாலோகிராபிக்கென தனியே வீடியோக்கள் இருக்கின்றன அவற்றை 3D யாக மாற்றியமைக்கலாம்.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.