ஹீரோ கரிஸ்மா ZMR 2018 இந்தியாவில் வெளியானது

ஹீரோ கரிஸ்மா ZMR 2018 இந்தியாவில் வெளியானது

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவில் தனது ZMR 2018 மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய 2018 ZMR மோட்டார்சைக்கிள் விற்பனையாளர்களிடம் வழங்கப்படாமல் அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

 

2018 ஆட்டோ எக்ஸ்போவில் 2018 ஹீரோ ZMR இந்தியாவில் முதல் முறையாக அறிமுகமானது. ஹீரோ விற்பனையாளர்கள் ஏற்கனவே 2018 கரிஸ்மா மாடலுக்கான முன்பதிவுகளை துவங்கியுள்ளனர். புதிய 2018 ZMR  மாடலில் சில காஸ்மெடிக் மாற்றங்கள் மட்டும் செய்யப்பட்டுள்ளது.

 

அந்த வகையில் புதிய மோட்டார்சைக்கிளில் 223சிசி ஆயில்-கூல்டு சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின், தற்தமயம் ஃபியூயல் இன்ஜெக்ஷன் வகையிலும் கிடைக்கிறது. இந்த பி.எஸ். IV ரக இன்ஜின் 20 பி.ஹெச்.பி. மற்றும் 19.7 என்.எம். டார்கியூ செயல்திறன், 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

 

 

ஹீரோ 2018 ZMR  அதிகபட்சம் மணிக்கு 129 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் என ஹீரோ மோட்டோகார்ப் தெரிவித்துள்ளது. 2018 கரிஸ்மா ZMR மாடலில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் முன்புறமும், பின்புறம் ட்வின் ஷாக் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்கள் வழங்கப்பட்டுள்ளன.

 

இந்தியாவில் ஹீரோ கரிஸ்மா ZMR 2003-ம் ஆண்டு அறிமுகமானது. ஹீரோ பிரான்டின் மிகமுக்கிய வாகனங்களில் ஒன்றாக கரிஸ்மா இருக்கிறது. பல்வேறு காரணங்களால் கரிஸ்மா விற்பனை குறைந்து வருகிறது. அந்த வகையில் புதிய கரிஸ்மா எந்தளவு வரவேற்பை பெறும் என்பது கேள்விகுறியாகவே உள்ளது.

 

ஸ்டான்டர்டு மற்றும் டூயல் டோன் என இருவித வேரியன்ட்களில் அறிமுகமாகி இருக்கும் ஹீரோ ZMR 2018 இந்திய விலை முறையே ரூ.1.08 லட்சம் மற்றும் ரூ.1.10 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு விலைகளும் எக்ஸ்-ஷோரூம், டெல்லி சார்ந்தது ஆகும். இந்தியாவில் புதிய 2018 கரிஸ்மா ZMR பஜாஜ் பல்சர் ஆர்.எஸ். 200 மற்றும் ஜிக்சர் எஸ்.எஃப். உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமையும். #HERO

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.