ஹேக்கர்களிடம் இருந்து யாகூ கணக்கை பாதுகாக்க சில வழிமுறை

ஹேக்கர்களிடம் இருந்து யாகூ கணக்கை பாதுகாக்க சில வழிமுறை

சமீபத்தில் யாகூ இணையதளத்தில் கணக்கு வைத்திருக்கும் 50 கோடி பயனாளிகளின் தகவல்கள் திருடப்பட்டதையடுத்து, பாதுகாப்பு குறித்து யாகூ நிறுவனம் சில வழிமுறைகளை தெரிவித்துள்ளது.

2014 ஆம் ஆண்டில் இந்தத் தகவல் திருட்டு நடந்துள்ளதாக அந்நிறுவனம் கூறிய நிலையில், இது குறித்து அமெரிக்க மத்திய புலனாய்வுத்துறை விசாரணை மேற்கொண்டது. இந்நிலையில், தற்போது, யாகூ பயனாளிகளிடையே ஏற்பட்டுள்ள குழப்பத்தை தீர்க்கும் வகையில், தகவல் எப்படி திருடப்பட்டுள்ளது, பயனாளிகள் எப்படி தகவலை பாதுகாக்க வேண்டும் என்பன குறித்து அந்நிறுவனம் சில வழிமுறைகளை கூறியுள்ளது.

கணக்கு வைத்திருப்போரின் பெயர், மின்னஞ்சல் முகவரி, பிறந்த தேதி, கடவுச்சொல் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் திருடப்பட்டுள்ளதாகவும் யாகூ நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், பாதுகாக்கப்படாத கடவுச் சொற்கள், பணப்பரிமாற்றம், வங்கி கணக்கு குறித்த தகவல்கள் திருடப்படவில்லை எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

யாகூ கணக்கை நிர்வகிக்கும் பயனாளிகள் தங்களது கணக்கை பாதுகாத்துக்கொள்ள செய்ய வேண்டியவை :

1. கடவுச் சொற்களை மாற்ற வேண்டும்.

2. யாகூவுடன் வங்கி கணக்கு தொடர்பான லிங்க்குகளை இணைத்து வைத்திருந்தால், உடனடியாக அதை மறுஆய்வு செய்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

3. 2014ஆம் ஆண்டு முதல் கடவுச் சொற்களை மாற்றாத நபர்கள் உடனடியாக அவற்றை மாற்றும் படி யாகூ நிறுவனம் அதன் பயனாளிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

4. யாகூ கணக்கில் உள்நுழையும் போது பாதுகாப்பு அறிவிப்பு கிடைக்கும், அதனை கிளிக் செய்து கணக்கின் பாதுகாப்பு விவரங்களை மாற்றிக் கொள்ளவும்.

5. சந்தேகம் ஏற்படும் விதத்தில் யாகூ கணக்கில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பதை பயனர்கள் கவனிக்க வேண்டும். குறிப்பாக தாங்கள் அனுப்பாத இமெயில் உங்கள் கணக்கில் இருந்து அனுப்பப்பட்டுள்ளதா, கிரெடிட் கார்ட் சேவையில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பனவற்றை கவனிக்க வேண்டும்.

6. உங்களது சுய விவரம் குறித்த தகவலை பகிர்ந்துக் கொள்ள கூறி, ஏதேனும் மெயில் வந்தால் அதனை புறக்கணிக்க வேண்டும்.

7. அறிமுகம் இல்லாத, சந்தேகத்திற்குரிய வகையில் இருக்கும் மெயில் மூலமாக எவ்வித பதிவிறக்கங்களையும் செய்ய வேண்டாம்.

8. யாகூ கணக்கிற்கு பயன்படுத்தும் கடவுச் சொல்லை மற்ற இணையதளங்களுக்கு பயன்படுத்த வேண்டாம்.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.