‘விரதம் என்பது சிகிச்சை!’ - ஆயுர்வேதத்தின் ஆரோக்கிய பலன்கள்

‘விரதம் என்பது சிகிச்சை!’ - ஆயுர்வேதத்தின் ஆரோக்கிய பலன்கள்

‘ஒருவேளை உண்பான் யோகி
இருவேளை உண்பான் போகி
மூவேளை உண்பான் ரோகி
நான்குவேளை உண்பான் பாவி’

- இயற்கை மருத்துவத்தின் அடிப்படையில் நீதிவெண்பாவில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. ஆனால், மூன்று வேளை உணவையே ஆறுவேளையாகப் பிரித்து உண்ணலாம் என்கிறது நவீன மருத்துவம். இப்படியிருக்க விரதம் இருப்பது உடல்நலனுக்கு ஆரோக்கியமானது என்றும் சொல்லப்படுகிறது. எல்லா மதங்களிலும் குறிப்பிட்ட காலகட்டங்களில் விரதம் கடைபிடிக்கப்படுகிறது.

\"விரதம்\" 

நோன்பு

ரமலான் நோன்பு தொடங்கியிருக்கும் இந்தச் சூழலில் விரதம் பற்றி அறிந்து கொள்வது நல்லது என்றே கருதுகிறோம். பொதுவாக விரதம் ஆரோக்கியமானதா? என்று கேள்வி எழுவது இயல்பே. இஸ்லாமியச் சகோதரர்கள் உண்ணா நோன்பு கடைபிடிக்கத் துவங்கி விட்டனர். இஸ்லாமில் மட்டுமல்லாமல், இந்து, கிறிஸ்தவ மதங்களிலும்கூட விரதம் இருக்கும் நடைமுறைப் பின்பற்றப்பட்டு வருகிறது. மதங்களைப்பொறுத்தவரை விரதம் இருப்பதை உபவாசம் என்கிறார்கள் ஆன்மிகப் பெரியோர். இதற்கு இறைவனுக்கு சமீபமாக இருப்பது என்பது பொருள். அதன் அடிப்படையில்தான் பெளர்ணமி, அமாவாசை மற்றும் வெள்ளிக்கிழமை, சஷ்டி  உள்ளிட்ட நாள்களில் விரதம் இருப்பது இறைவனுக்கு உகந்தது என்றும் அந்த நாட்களில் விரதம் இருந்தும் வருகிறார்கள். இப்படி, பெரும்பாலான மதங்களும் ஏற்றுக்கொண்ட ஒரு நடைமுறை உணவு உண்ணாமல் இருக்கும் விரத முறையாகும். 

இது ஒருபுறம் இருக்க, இறைவனின் மீதான பக்திக்காக விரதம் என்ற பெயரில் நம் உடலை வருத்திக்கொள்வது இயற்கைக்கு முரணானது என்கிறார்கள் ஒரு பிரிவினர். 

\"நோன்பு\" 

இதனை இறைவனுக்காகப் பின்பற்றப்படும் ஒரு நேர்த்திக்கடன் என்று பொத்தம் பொதுவாக ஒதுக்கிவிட முடியாது. மத நம்பிக்கை, கலாசாரம் என்ற பெயரில் பின்பற்றப்படும் ஒவ்வொன்றும் நமது வாழ்வியலோடு தொடர்பு கொண்டது என்பதை அறிவோம். அதனால்தான் நம் முன்னோர் கடைப்பிடித்து வந்துள்ளனர். இதைத்தான் பக்தியைத் தாண்டி இதில் மருத்துவமும் உள்ளது என்றும் ஆயுர்வேதத்தில் உணவு உண்ணாமை என்பது மிகச் சிறந்த சிகிச்சைமுறை என்றும் சொல்கிறார் ஆயுர்வேத மருத்துவர் ஆர்.பாலமுருகன். மேலும் இதனால் கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள் குறித்து அவர் கூறுவதைப் பார்ப்போம். 
 
சிகிச்சை

விரதம் என்பது ஆயுர்வேதத்தில் உயர்ந்த சிகிச்சை முறைகளில் ஒன்றாகப் பின்பற்றப்படுகிறது. அதாவது, உணவு உண்ணாமையை \"மருத்துவர்\"லங்கணம் பரம ஒளஷதம்\" என்கிறது ஆயுர்வேதம். லங்கணம் என்றால் உணவு உண்ணாமல் இருப்பதாகும். அதேபோல பரமம் என்றால் உத்தமம் என்றும் ஔஷதம் அல்லது அவுடதம் என்ற வார்த்தைக்குச் சிகிச்சை என்றும் பொருள். 

மேலும், ஆயுர்வேதத்தில் லங்கணம், ப்ரும்ஹணன் என இரண்டு வகையான சிகிச்சை முறைகள் உள்ளன. இதில் லங்கணம் என்பதற்கு உடலை சுத்தப்படுத்துவது என்ற பொருள் உண்டு. உடலை சுத்தப்படுத்தும் முறைகளில் பல்வேறு வகையான சிகிச்சைகள் இருந்தாலும் உணவு உண்ணாமல் இருப்பதே பிரதானமாக அறியப்படுகிறது.

யார் விரதமிருப்பது? 

கபம், பித்தம் அதிகம் உள்ளவர்கள், உடலில் அதிகம் மலம் உடையவர்கள், உடல் பருமனாக உள்ளவர்கள், நல்ல உடல் வலிமை உள்ளவர்கள் மற்றும் சர்க்கரை நோயாளிகள் (குளிர்காலங்களில்) உண்ணா நோன்பை மேற்கொள்ள மிகவும் தகுதியானவர்கள் என்கிறது ஆயுர்வேதம். மற்றவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைப்படி, விரதம் கடைபிடிப்பதே சிறந்தது. உணவு உண்ணாமையை, இரண்டு வாரத்துக்கு ஒருமுறையாவது கடைப்பிடிப்பது நல்லது. 

\"விரத

நன்மைகள்

உடலில் பல்வேறு நோய்கள் ஏற்படக் காரணமாக இருப்பது உடலில் தேங்கும் கழிவுகளே. ஆகவே, விரதம் மேற்கொள்வதால் அது சிறுநீர், மலம் போன்ற உடல் கழிவுகளை நீக்கிவிடும். மேலும், உடலில் உள்ள ரத்தக் குழாய்களில் தங்கியுள்ள அழுக்குகள், கசடுகள் நீங்கிவிடும். தொண்டை, இதயம், ரத்தம் தூய்மையடையும். ஏனென்றால், உணவு உண்ணாதபோது உடல் உறுப்புகளுக்கு ஓய்வு கிடைப்பதால் அந்த நேரங்களில் தன்னைத்தானே சுத்தப்படுத்திக்கொள்கின்றன. 

உடலில் உள்ள நொதிகளின் செயல்பாட்டைச் சீராக்குகிறது. ஹார்மோன் சுரப்புகளைத் தூண்டுகிறது. குறிப்பாக, பசியைத் தூண்டும் ஹார்மோனான க்ரைலின் (Ghrelin) சுரப்பைச் சீராக்கி பசியின்மையைப் போக்கும்.

உடலில் உள்ள பிராணவாயு உள்ளிட்ட 10 விதமான வாயுக்களின் செயல்பாட்டைச் சீராக்கும். இந்த வாயுக்கள் உடல் இயக்கத்துக்கு முக்கியமானவை. இவை வளர்சிதை மாற்றத்தை (மெட்டபாலிசம்) அதிகரிக்கும்.

உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளைக் குறைத்து நல்ல கொழுப்புகள் (HDL cholesterol) அதிகரிக்க உதவுகிறது. இதனால் ரத்த நாளங்களில் படியும் கொழுப்புகளைக் குறைத்து மாரடைப்பு போன்ற இதய பாதிப்புகளில் இருந்தும் பாதுகாக்கும். 

உடல் வலிமை உள்ளவர்கள், விளையாட்டு வீரர்களுக்கு (Athletes) வலுவான தசைகளுடன் அழகான உடல் கட்டமைப்பு கிடைக்கிறது. உடல் பருமனாக உள்ளவர்களுக்கு உடல் எடை குறைய உதவுகிறது. இதுதவிர மனத்தூய்மை, மன வலிமை பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.