ஆக்மெண்ட்டட் ரியாலிட்டி... இணையம் இல்லாமல் வீடியோ சாட்... தமிழ் சினிமா அப்பவே அப்படி!

ஆக்மெண்ட்டட் ரியாலிட்டி... இணையம் இல்லாமல் வீடியோ சாட்... தமிழ் சினிமா அப்பவே அப்படி!

ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்கள் பயன்படுத்தும் பல விஷயங்கள் நம்மை ஆச்சர்யப்படுத்தும். ஆனால், அவர்களையே அதிர்ச்சியாக்கும் பல விஷயங்கள் நம் தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளுக்கு முன்பே வந்திருக்கின்றன. அப்போது கற்பனையாக இருந்தவை இன்று நிஜமாகியிருக்கலாம். ஆனால், விதை நம்மாளுங்களும் போட்டுருக்காங்க பாஸ்.

லேப்டாப்

1957-ல் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகி சக்கை போடு போட்ட படம், மாயாபஜார். அப்போது எல்லாம் லேப்டாப் என்ற கான்செப்ட் கூட நம்ம மக்களிடம் பரிச்சயம் இல்லை. டெக்னிக்கலா பாத்தா, இந்திய சினிமாவில் லேப்டாப் வந்த முதல் காட்சி இதுதான். அதுவும் இணையம் இல்லாமலே, வீடியோ சாட்.

 

ஆக்மெண்ட்டட் ரியாலிட்டி

பட்டணத்தில் பூதம் படத்தில், தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கரும், நாகேஷும் ஒரு ஜாடியை திறக்க, அதிலிருந்து பூதம் வெளிவரும். ஜாலியாய் அது பேப்பரிலேயே ’எங்க வீட்டுப் பிள்ளை ’ படத்தை ப்ளே செய்யும். இந்த ஐடியாதான் இன்று ஆக்மெண்ட்டட் ரியாலிட்டி தொழில்நுட்பம் மூலம் நிஜமாகியிருக்கிறது

 

 

ஹிட்டன் கேமரா

கங்கா கௌரி படம் பார்த்திருக்கீங்களா? ’தியேட்டரை விட டிவில தான் இந்தப் படம் அதிக முறை பாத்து இருக்கேன்’ என படத்துல நடிச்ச லியோனியே சொன்னது தான் ஹைலைட். இப்பலாம் கேமரா ஸ்க்ரூல இருக்குன்றாங்க. மைக் குண்டூசில இருக்குன்னு சொல்றாங்க. இந்த டெக்னிக்க அப்பவே பயன்படுத்தி குடைல வச்சாங்க பாருங்க… அதான் கோடம்பாக்கம். 

 

வயர்லெஸ் கத்தி

சார்ஜர்ல கூட வயர்லெஸ் வந்துடுச்சு இப்ப. யோசிச்சு பாருங்க. கத்திக்கும், ரஜினிக்கும் இடையில எப்படி கம்யூனிகேஷன் நடக்குது? எல்லாம் வயர்லெஸ் பாஸ் வயர்லெஸ்.

 

 

தலையெழுத்தில் ஒரு பாஸ்வேர்டு

ஃபிங்கர் பிரிண்ட் வச்சா மொபைல் ஓப்பன் ஆகும் காலம் இது. வழக்கமா கட்ட விரல் ஆரம்பிச்சு கால் விரல் வரைக்கும் அதுக்கு யூஸ் பண்ணுவோம். ஆனா, சூப்பர் ஸ்டார் இந்த லாக்கருக்கு பாஸ்வேர்டா தனது தலையெழுத்தையே ஃபிக்ஸ் பண்ணிருப்பாரு போல. எப்படி திறக்குது பாருங்க.

 

ஸ்மார்ட் கன்

கமல் படம் எல்லாம் 20 வருஷத்துக்கு அப்புறம் தான் புரியும் என்பது உலக நியதி.  அபூர்வ சகோதரர்கள் படத்துல குட்டி அப்பு, டெல்லி கணேஷ கொல்றதுக்கு யூ-டர்ன் போட்டு டேபிளை எல்லாம் உடைச்சு இருப்பார். ஆனா, அதவிட ஜெய்சங்கர கொல்றதுக்கு, டபுள் சைடு சுடும் துப்பாக்கி எல்லாம் யூஸ் பண்ணுவாரே. அதாங்க உலகின் முதல் ஸ்மார்ட் கன்.

 

 

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.