இந்தியாவில் புதிய ரெனால்ட் கேப்டூர் அறிமுகம்

இந்தியாவில் புதிய ரெனால்ட் கேப்டூர் அறிமுகம்

ரெனால்ட் கேப்டூர் மாடல் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரெனால்ட் கேப்டூக் செயலி மற்றும் ரெனால்ட் இந்தியா வலைத்தளம் மூலம் ரூ.25,000 செலுத்தி புதிய ரெனால்ட் கேப்டூர் மாடலினை முன்பதிவு செய்ய முடியும்.

ரெனால்ட் டஸ்டர் மற்றும் லாட்ஜி MPV மாடல்களை தழுவி புதிய கேப்டூர் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கேப்டூர் உற்பத்தி ஏற்கனவே துவங்கியுள்ள நிலையில், விநியோகம் அக்டோபர் மாத வாக்கில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பிரீமியம் தோற்றம் கொண்டுள்ள ரெனால்ட் கேப்டூர் முன்பக்கம் ஃபேமிலி கிரில், டூயல்-டோன் அலாய் வீல் மற்றும் எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் டெயில்லேம்ப் வழங்கப்பட்டுள்ளது. உள்புறங்களிலும் அட்டகாச வடிவமைப்பு மற்றும் டூயல்-டோன் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. 

\"\"

இதன் சென்ட்டர் கன்சோலில் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டுவின்-பாட் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டிஜிட்டல் இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இதன் டாப் என்ட் மாடல்களில் கோல்டு மற்றும் வெள்ளை நிறத்திலான கேபின் வழங்கப்படுகிறது. இத்துடன் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்ய பல்வேறு கஸ்டமைசேஷன் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.  

ரெனால்ட் கேப்டூர் ஸ்மார்ட் அக்சஸ் கார்டு மற்றும் இன்ஜின் ஸ்டார்ட் பட்டன் மற்றும் 7.0 இன்ச் டச் ஸ்கிகீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ரேடியோ மற்றும் ப்ளூடூத், வாய்ஸ் ரெக்கஃனீஷன், மேப்ஸ் மற்றும் டைம் டிஸ்ப்ளே உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக கிளைமேட் கண்ட்ரோல், சரவுண்டு இலுமினேஷன் மற்றும் ரியர் கூலிங் வென்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

\"\"

17.0 இன்ச் அலாய் வீல் கொண்டுல்ள ரெனால்ட் கேப்டூர் எல்இடி ஹெட்லேம்ப், பகலிலும் எரியும் மின்விளக்கு, டைனமிக் டர்ன் இன்டிகேட்டர் கொண்டுள்ளது. இத்துடன் பாதுகாப்பு அம்சங்களை பொருத்த வரை ABS, EBD பிரேக் அசிஸ்ட், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

ரெனால்ட் கேப்டூர் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் கிடைக்கிறது. இதன் பெட்ரோல் மாடல் 16-வால்வ் கொண்டு நான்கு சிலிண்டர் 1.5 லிட்டர் H4K இன்ஜின் மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதன் பெட்ரோல் யுனிட் 105bhp மற்றும் 142Nm செயல்திறன் கொண்டுள்ளது. 

டீசல் மோட்டார் 1.5 லிட்டர் K9K டீசல் இன்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. இந்த இன்ஜின் 109bhp மற்றும் 240Nm செயல்திறன் கொண்டுள்ளது.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.