டொயோட்டா பார்ச்சூனர் TRD ஸ்போர்டிவோ இந்தியாவில் வெளியானது

டொயோட்டா பார்ச்சூனர் TRD ஸ்போர்டிவோ இந்தியாவில் வெளியானது

2009-ம் ஆண்டு வெளியானது முதல் டொயோட்டா நிறுவனத்தி்ன் பிரபல எஸ்.யு.வி. ரக மாடலாக பார்ச்சூனர் இருக்கிறது. இரண்டாம் தலைமுறை பார்ச்சூனர் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அதிக ஸ்போர்ட் தோற்றம் கொண்ட புதிய பார்ச்சூனர் TRD ஸ்போர்டிவோ மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
 
இந்தியாவில் 31.01 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள புதிய பார்ச்சூனர் பியர்ல் வைட் நிறத்தில் மட்டும் கிடைக்கிறது. புதிய எஸ்.யு.வி. மாடலில் TRD சார்ந்து வெளிப்புறம் வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்பக்கம் புதிய TRD ரேடியேட்டர் கிரில், 18.0 இன்ச் TRD அலாய் மற்றும் TRD ஸ்போர்டிவோ பேட்ஜ் உள்ளிட்டவை கொண்டுள்ளது.   
 
\"\" 
 
உள்புற கேபின் சிவப்பு நிறத்திலான ஸ்டிட்ச் அக்சென்ட் சீட், 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், நேவிகேஷன், பார்க் அசிஸ்ட், பேக் மானிட்டர், சென்சார் மற்றும் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஆட்டோ பை-பீம் எல்இடி, எல்இடி ஃபாக் லேம்ப் மற்றும் பட்டன் ஸ்டார்ட் ஆப்ஷன்கள், ஏழு ஏர்பேக், 4-வீல் டிஸ்க் பிரேக் மற்றும் ABS, EBD மற்றும் பிரேக் அசிஸ்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. 
 
புதிய பார்ச்சூனர் மாடலில் 2.8 லிட்டர் டீசல் இன்ஜின், 177PS/450Nm செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் பேடிள் ஷிஃப்டர்கள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் டிராக்ஷன் கண்ட்ரோல் இகோ மற்றும் பவர் என இரண்டு டிரைவிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளது.
 
இந்தியாவில் புதிய பார்ச்சூனர் TRD ஸ்போர்டிவோ ஃபோர்டு என்டேவர், இசுசு MUX மற்றும் மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.